இந்தியாவில் ரூ.1.73 லட்சம் விலையில் புதிய கேடிஎம் ட்யூக் 250 பைக் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. 390 மற்றும் 200 டியூக் பைக்குகளுக்கு இடையில் புதிய டியூக் 250 பைக் நிலை நிறுத்தப்பட்டு மிகவும் சவலான விலையிலும் அமைந்துள்ளது.
கேடிஎம் ட்யூக் 250
இரு பைக் மாடல்களுக்கும் இடையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள புதிய ட்யூக் 250 பைக்கில் ஆரஞ்சு மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்க உள்ளது. இந்த மாடலில் 250சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது.
யூரோ 4 மாசு விதிமுறைகளுக்கு ஏற்றவகையில் 30bhp பவரை வெளிப்படுத்தும் 250சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 24 NM வெளிப்படுத்தும். இதில் சிலிப்பர் கிளட்ச் ஆப்ஷனுடன் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
முன்பக்க டயரில் 300மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 230மிமீ டிஸ்க் பிரேக்குடன் ஏபிஎஸ் நிரந்தர அம்சமாக இணைக்கப்படவில்லை.
கேடிஎம் டியூக் 250 பைக் விலை ரூ. 1.73 லட்சத்தில் அமைந்துள்ளது.
(டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை)