Bike News

கேடிஎம் 390 டியூக் சோதனை

Spread the love

கேடிஎம் 390 டியூக் பைக் விரைவில் விற்பனைக்கு வரப்போகின்றது. தற்பொழுது சோதனையில் உள்ள 390 டியூக் பற்றி சில விவரங்களை கானலாம். கேடிஎம் 390 டியூக் பைக் பற்றி சில விடயங்களை கானலாம்.

ஒரு சிலிண்டர் கொண்ட வாட்டர் கூல்டு 375 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் வெளிப்படுத்தும் அதிகபட்ச ஆற்றல் 44எச்பி ஆகும் .டார்க் 35என்எம் ஆகும். 6 ஸ்பீடு கியர் பாகஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கேடிஎம் 390 டியூக் பைக்கில் உள்ள ஏபிஎஸ் வசதினை தேவைப்படும் பொழுது ஆன்/ஆஃப் செய்துக்கொள்ளலாம். சோதனையில் உள்ள கேடிஎம் டியூக் பைக் மைலேஜ் லிட்டருக்கு 38கீமி தருகின்றதாம். நகரங்களில் லிட்டருக்கு 25 கீமிக்கு மேல் கிடைக்கலாம்.

இதன் எடை 139 கீகி (எரிபொருள் இல்லாமல்)ஆகும். 11 லிட்டர் கொள்ளவு கொண்ட எரிபொருள் கலன் உள்ளது. மெட்ஜிலர் டயர் சிறப்பான கிரிப் டயர் ஆகும்.

கேடிஎம் 390 டியூக் விலை ரூ 2 இலட்சம் முதல் 2.8 இலட்சம் வரை எதிர்பார்க்கப்படுகின்றது.


Spread the love
Share
Published by
MR.Durai
Tags: KTM