Automobile Tamilan

சுஸூகி ஜிக்ஸெர் , SF பைக்கில் டிஸ்க் பிரேக் விற்பனைக்கு வந்தது

சுஸூகி ஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸெர் SF பைக்குகளில் பின்புற சக்ரத்தில் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்ட வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜிக்ஸெர் SF மோட்டார்சைக்கிளில் ரியர் டிஸ்க் பிரேக் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது.

suzuki-gixxer-SF-rear-disc-brake

14.8 hp ஆற்றலை வெளிப்படுத்தகூடிய 155சிசி என்ஜினை பெற்றுள்ள ஜிக்ஸெர் வரிசை பைக் என்ஜினில் சுஸூகி ஈக்கோ பெர்ஃபாமென்ஸ் நுட்பத்தினை பெற்றுள்ளதால் சிறப்பான மைலேஜ் தருகின்றது. இதன் இழுவைதிறன் 14.02 Nm ஆகும். இஞ்ஜின் ஆற்றலை கடத்த 5 வேக கியர்பாக்சினை பெற்றுள்ளது.

முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரினை பெற்றுள்ளது.

ஜிக்ஸெர் நேக்டு பைக்கின் முன்பக்க டயரில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 240மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் ட்ரம் பிரேக் ஆப்ஷனலாக கிடைக்கின்றது.

ஜிக்ஸெர் எஸ்எஃப் ஃபுல் ஃபேரிங் செய்யப்பட்ட மாடலில் ரியர் டிஸ்க் பிரேக் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது மற்றும் ட்ரம் பிரேக் ஆப்ஷனலாக கிடைக்கின்றது.

2014 ஆம் ஆண்டில் சந்தைக்கு வந்த ஜிக்ஸெர் பைக்குகள் சிறப்பான வரவேற்பினை பெற்ற 150சிசி முதல் 160 சிசி வரையிலான தொடக்கநிலை ஸ்டீரிட் ஸ்போர்ட்டிவ் பைக்குகளில் சிறப்பான சந்தையை பெற்றுள்ளது.

ஒற்றை வண்ணம் , இரட்டை வண்ண கலவை என இருவிதமான வண்ணத்தில் 5 விதமான வண்ணங்களில் கிடைக்கின்றது.

சுஸூகி ஜிக்ஸெர் பைக் விலை

சுஸூகி ஜிக்ஸெர் SF பைக் விலை

( அனைத்தும் சென்னை ஆன்ரோடு விலை பட்டியல் )

 

 

Exit mobile version