இந்திய சந்தையில மிக சிறப்பான  பெர்ஃபாமென்ஸை தரும் சிறந்த பைக் 2017 வரிசையில் 150cc – 180cc வரையிலான உள்ள பைக் மாடல்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. சிறப்பான ஸ்டைல் தோற்ற பொலிவு , தரம் செயல்திறன் போன்வற்றை கொண்டு 150சிசி பைக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.

தொடக்க நிலை மற்றும் பிரிமியம் நிலைக்கும் நடுவில் உள்ள இந்த 150 சிசி பைக்குகள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதை மறுப்பதற்க்கில்லை. தொகுக்கப்பட்டுள்ள மாடல்களில் ரைடர் சாய்ஸ் மற்றும் ஃபேம்லி சாய்ஸ் என இரு பிரிவுகளில் தொகுக்கப்பட்டுள்ளது.

மேலும் 150சிசி முதல் 180சிசி வரையிலான சந்தையில் உள்ள முக்கிய மாடல்கள் ஹோண்டா சிபி யூனிகார்ன் , சிபி ஹார்னெட் 160R,  யமஹா ஃபேஸர் , FZ-S 2.0 FI , FZ 2.0 FI ,  ஹீரோ எக்ஸ்ட்ரீம் , எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் ,பஜாஜ் வி15 , பஜாஜ் பல்சர் 150, பல்சர் NS160 ,பல்சர் AS150 ,  பல்சர் 180 , அவென்ஜர் 150 , டிவிஎஸ் அப்பாச்சி 160 RTR ,  டிவிஎஸ் அப்பாச்சி 180 RTR , சுஸூகி ஜிக்ஸெர் போன்ற மாடல்கள் தவிரக்க முடியாத மாடல்களாக இருந்தாலும் முக்கிய மாடல்கள் மட்டும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

 

1. ஹோண்டா சிபி ஹார்னெட் 160 ஆர்

150சிசி முதல் 180சிசி வரையிலான மோட்டார்சைக்கிள் பிரிவில் மிக சிறப்பான மாடலாக ஸ்டைலிசான தோற்றம் , யூத் பெர்ஃபாமென்ஸ் என பட்டைய கிளப்பும் சிபி ஹார்னெட் 160 ஆர் பைக் மற்ற மாடல்களை விட முன்னிலை வகித்தாலும் விலையிலும் சற்று பிரிமியமாக அமைந்துள்ளது.

 

15.7 பிஹெச்பி வெளிப்படுத்துகின்றது. இதன் டார்க் 14.76 என்எம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.  ஹார்னெட் 160R பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 58.95 கிமீ ஆகும்.

ஹோண்டா சிபி ஹார்னெட் 160 ஆர் பைக்கில் சமீபத்தில் சிறப்பு எடிசன் மாடலும் விற்பனைக்கு கிடைக்கின்றது. இருவிதமான வேரியண்டில் கிடைக்கின்ற ஹார்னெட் 160ஆர் சிபிஎஸ் பிரேக் மற்றும் ஸ்டான்டர்டு பிரேக் ஆப்ஷனில் கிடைக்கின்றது.

 

2. டிவிஎஸ் அப்பாச்சி 180 ஆர்டிஆர்

தெடர்ச்சியாக பல வருடங்களாக பெரும்பாலனோரின் மிக விருப்பமான மாடலாக வலம் வருகின்ற அப்பாச்சி ஆர்டிஆர் 180சிசி பைக்கில் 17.30 bhp ஆற்றல் வெளிப்படுத்தும் மற்றும் டார்க் 15.50 Nm ஆகும்.

சிறப்பான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தும் 180சிசி பைக் பிரிவில் விளங்கும் மாடலான அப்பாச்சி 180 பைக்கின் உச்ச வேகம் மணிக்கு  120 கிமீ வரை தாரளமாக எட்டும் திறனைபெற்ற மாடலாகும். மிக சிறந்த பாதுகாப்பு அம்சமாக கருத்தப்படும் ஏபிஎஸ் ஆப்ஷனலாக பெற்ற மாடலாகும்.

அப்பாச்சி பைக்குகள் வாங்க விரும்புபவர்கள் மட்டும் சில மாதங்கள் வரை காத்திருங்கள், புதிய மேம்படுத்தப்பட்ட அப்பாச்சி 160, அப்பாச்சி 180 என இரு மாடல்களும் விற்பனைக்கு வரவுள்ளது.

 

3. சுஸூகி ஜிக்ஸெர்

சுசூகி ஜிக்ஸெர் பைக் விற்பனைக்கு வந்த பிறகு சுஸூகி  நல்லதொரு விற்பனை எண்ணிக்கை பதிவு செய்து வருகின்றது. சிறப்பான தோற்றத்தினை கொண்ட ஜிக்ஸெர் பைக்கில் 14 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 155சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன்டார்க் 14 Nm ஆகும்.

சிறப்பான தோற்ற அமைப்புடன் விளங்கும் சுசூகி ஜிக்ஸெர் 150 பைக் சிறப்பான வரவேற்பினை இளைஞர்கள் மத்தியில் பெற்று விளங்குகின்றது.

4. யமஹா FZ-S FI V 2.0

ஸ்டைலிசான யமஹா பைக்குகளில் 150சிசி பிரிவில் இடம்பெற்றுள்ள பைக்குகளில் யமஹா FZ-S FI வெர்ஷன் 2.0 மாடலில் 12.90 bhp  ஆற்றலை வெளிப்படுத்தும் 150சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது.இதன் டார்க் 12.8 Nm ஆகும். ஸ்டைலிசான பாடி கிராஃபிக்ஸ் தொடர்ச்சியாக யமஹா எப்இசட் – எஸ் இளையோர்கள் மத்தியில் நல்ல ஆதரவினை பெற்று விளங்குகின்றது.

சராசரியாக யமஹா FZ-S FI வெர்ஷன் 2.0 லிட்டருக்கு 40 -45 கிமீ மைலேஜ் வரை கிடைக்கின்றது.

 

5. பஜாஜ் பல்சர் ஏஎஸ்150

பஜாஜ் நிறுவனத்தின் அவென்ஜர் 150 , வி15 போன்ற பைக்குகள் க்ரூஸர் ரக வரிசை சார்ந்த மாடல்களாக சிறப்பான வரவேற்பினை பெற்றிருந்தாலும். பஜாஜ்  பல்சர் ஏஎஸ் 150 பைக் மிக சிறப்பான ஸ்டைலிங் மாடலாக சந்தையில் உள்ளது.

 

16.7 bhp ஆற்றலை தரவல்ல 149.5 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 13Nm ஆகும்.  150 சிசி பிரிவில் அதிக சக்தி வெளிப்படுத்தும் முதன்மையான மாடலாக பல்சர் AS150 விளங்குகின்றது. பல்சர் ஏஎஸ்150 பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 45கிமீ தரும்.

6. ஹீரோ எக்ஸ்டீரிம் ஸ்போர்ட்ஸ்

சிறந்த பைக்குகள் பட்டியலில் 6வது இடத்தில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் மாடலின் எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் பைக் சில மாதங்களுக்கு முன் விற்பனைக்கு வந்தது. குறைவான விலையில் சிறப்பான மாடலாக விளங்கும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் பைக்கில் 15.6 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 149சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 50கிமீ தரும்.

ஃபேம்லி சாய்ஸ்

யூனிகார்ன் 150, யூனிகார்ன் 160 மற்றும் அச்சீவர் 150 பைக்குகளுக்கு ஆகிய இரு மாடல்களுமே மிக சிறந்த 150 சிசி பைக்குகளில் பெரிய அளவில் ஸ்டைல் அம்சங்களை விரும்பாத மைலேஜ் மற்றும் தரம் சார்ந்த அம்சங்களை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாக அமையும்.

க்ரூஸர் மாடல்

ஸ்போர்ட்டிவ் தவிர ஃபேம்லி சாய்ஸ் போன்றவற்றில் இருந்து மாறுபட்ட அம்சங்களை விரும்பும் க்ரூஸர் வரிசை மாடல்களில் தற்போது விற்பனை செய்யப்படுகின்ற ஒரே மாடல் அவென்ஜர் 150 பைக் மட்டுமே ஆகும்.

 

 

இந்த பைக்கிற்கு போட்டியாக சுசுகி GZ 150 க்ரூஸர் பைக் மாடல் அடுத்த சில மாதங்களுக்குள் விற்பனைக்கு வரவுள்ளது.

ஃபேரிங் மாடல்கள்

முழுதும் அலங்கரிக்கப்பட்ட எனப்படும் ஃபுல் ஃபேரிங் செய்யப்பட்ட மாடல்களான சுசுகி ஜிக்ஸர் SF, யமஹா R15, ஹோண்டா CBR 150R போன்ற பைக்குகளும் வரிசையில் உள்ளன.

 வரிசைப்படுத்தப்பட்டுள்ள சிறந்த பைக்குகள் பட்டியல் உங்களுக்கு பிடித்த பைக் எது மறக்காம கமென்ட் பன்னுங்க…