Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4V விற்பனைக்கு வந்தது

by automobiletamilan
ஜனவரி 20, 2016
in பைக் செய்திகள்

ரூ. 88,990 விலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V ஸ்போர்ட்டிவ் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இளைய தலைமுறை மற்றும் பெர்ஃபாமென்ஸ் பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக அப்பாச்சி 200 விளங்கும்.

 

tvs-apache-rtr200-bike-photo

டிவிஎஸ் அப்பாச்சி RTR 200  4V என்றால் டிவிஎஸ் அப்பாச்சி Racing Throttle Response 200 4 Valve என்பதாகும் . அப்பாச்சி சீரிஸ் பைக்கில் முதன்முறையாக 4 வால்வுகளை பயன்படுத்தியுள்ளதால் 4V  என்பதனை டிவிஎஸ் மோட்டார் இணைத்துள்ளது.

இரு என்ஜின் ஆப்ஷன்

அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் 21PS ஆற்றலை வெளிப்படுத்தும் 197.7 சிசி என்ஜினில் O3C கம்பஷென் சேம்பர் மூலம் ஆயில் மற்றும் ரேம் ஏர் மூலம் குளிர்விக்கப்படும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 18.1 NM ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. மேலும் இது  FI என்ஜின் ஆகும். இதன் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக் உச்ச வேகம் மணிக்கு 129 கிமீ ஆகும்.

அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் 20.5 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 197.7 சிசி என்ஜினில் O3C கம்பஷென் சேம்பர் மூலம் ஆயில் மற்றும் ரேம் ஏர் மூலம் குளிர்விக்கப்படும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 18.1 NM ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. மேலும் கார்புரேட்டர் என்ஜின் ஆகும். அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக் உச்ச வேகம் மணிக்கு 128 கிமீ ஆகும்.

பெர்ஃபாமென்ஸ் பிரிவில் அப்பாச்சி RTR 200  FI பைக் 0 முதல் 60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 3.9 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். 0 முதல் 100 கிமீக்கு 12 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.  அப்பாச்சி RTR 200  பைக் 0 முதல் 60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 3.95 விநாடிகள் கார்புரேட்டர் எடுத்துக்கொள்ளும்.

 

tvs-apache-rtr200-bike

அப்பாச்சே 200 பைக்கில் கொடுக்கப்பட்டுள்ள டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கன்சோலில் ஆர்பிஎம் மீட்டர் டேக்கோ மீட்டர் , ஸ்பீடோ மீட்டர் , எரிபொருள் அளவு , கியர் பொசிசன் , கியர் ஷிப்ட் இன்டிகேட்டர் , ஏபிஎஸ் லைட் என பலவற்றை பெற்று விளங்குகின்றது.

கருப்பு , கிரே , மஞ்சள்  , மேட் கருப்பு , மேட் வெள்ளை ,  வெள்ளை மற்றும் சிவப்பு என 7 வண்ணங்களில் வரவுள்ளது. முகப்பு விளக்கில் பகல் நேர எல்இடி விளக்குகளை பெற்றுள்ளது. முன்புறத்தில் 270மிமீ பிடெல் டிஸ்க் பிரேக் பின்புறத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக் ஆகியவற்றை பெற்றுள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக்ப் ஃபோர்க்குகள் பின்பக்கத்தில் மோனோசாக் கேஸ் சாக் அப்சார்பருடன் ஸ்பீரிங் கொடுக்கப்பட்டுள்ளது. ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷன் கார்புரேட்ர மற்றும் FI என இரண்டிலும் ஆப்ஷனலாக உள்ளது.

7 இஞ்ச் அலாய் மேக் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்புற டயர் 90/90 R17 மற்றும் பின்புற 130/70 R17 டிவிஎஸ் ரிமோரா டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் ஆப்ஷனலாக பைரேலி ஸ்போர்ட்டிவ் டயர்களும் உள்ளன.

டிவிஎஸ் அப்பாச்சி  RTR 200 விலை விபரம்

டிவிஎஸ் அப்பாச்சி  200 பைக் விலை ரூ. 88,990

டிவிஎஸ் அப்பாச்சி  200 பைக் விலை ரூ. 1,07,000 ( FI Engine )

ஏபிஎஸ் மாடல் டாப் வேரியண்ட் 1.15 லட்சமாக இருக்கும்

(எக்ஸ்ஷோரூம் டெல்லி)

மேலும் விபரங்கள் வரும் இணைந்திருங்கள்…

[envira-gallery id=”5537″]

Tags: RTR 200TVSஅப்பாச்சி
Previous Post

ஃபோர்டு மஸ்டாங் கார் ஜனவரி 28 வருகை

Next Post

டிவிஎஸ் விகட்ர் பைக் விற்பனைக்கு வந்தது

Next Post

டிவிஎஸ் விகட்ர் பைக் விற்பனைக்கு வந்தது

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version