டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் மோட்டார் சைக்கிளில் சிறப்பு பதிப்பாக சாக்லெட் கோல்ட் என்ற பெயரில் வரையறுக்கப்பட்ட பதிப்பு பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டார் சிட்டி ப்ளஸ் சாக்லெட் கோல்ட் எடிசன் விலை ரூ. 49,234 ஆகும்.
எவ்விதமான என்ஜின் ஆற்றல் மாற்றங்களும் இல்லாமல் 8.30 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 109.7 சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 8.70 Nm ஆகும். இதில் 4 வேக கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கில் முன்பு கோல்ட் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ள சாக்லெட் கோல்ட் எடிசனில் மேட் பிரவுன் , கோல்ட் மற்றும் டேன் ஆகிய வண்ண கலவையுடன் தங்க வண்ணத்திலான அலாய் வீலை பெற்றுள்ளது. மேலும் பின்புற சஸ்பென்ஷன் , சேஸீ மற்றும் புகைப்போக்கி போன்ற வற்றில் கருப்பு வண்ணத்தினை புகுத்தியுள்ளது.
கோல்ட் மற்றும் மேட் சாக்லெட் வண்ண கலவையில் அமைந்துள்ள புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் சிறப்பான ஸ்டைலிசான பைக்காக வாடிக்கையாளர்களுக்கு விளங்கும். மேலும் சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தினை வழங்கும் , பிரிமியம் வண்ணத்தில் அறிமுகம் செய்யப்படுள்ளதில் மகிழ்ச்சி கொள்வதாக விளம்பரபடுத்துதல் தலைவர் திரு.அருன் சித்தார்த் கூறியுள்ளார்.
சாதரன மாடலை விட சாக்லெட் கோல்ட் பதிப்பின் விலை ரூ. 1800 கூடுதலாக அமைந்துள்ளது. டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் சாக்லெட் கோல்ட் எடிசன் விலை ரூ. 49,234 (டெல்லி எக்ஸ்ஷோரூம்).
டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கின் போட்டியாளர்கள் ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் , ட்ரிம் யுகா , டிஸ்கவர் எம் மற்றும் மஹிந்திரா செஞ்சூரோ ஆகும்.