டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் |
புதிய டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் கூடுதல் மைலேஜூடன் எலக்ட்ரிக் ஸ்டார்ட் , ஸ்போர்ட்டிவ் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்டர் மற்றும் புதிய கிராப் ரெயில் போன்றவற்றை பெற்றுள்ளது.
7.5பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 99.7சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது . இதன் டார்க் 7.5என்எம் ஆகும். இதில் 4 வேக கியர்பாக்ஸ் உள்ளது. முந்தைய மாடலின் மைலேஜ் லிட்டருக்கு 87.7கிமீ தற்பொழுது வந்துள்ள புதிய டிவிஎஸ் ஸ்போர்ட் மைலேஜ் லிட்டருக்கு 95கிமீ ஆகும்.
என்ஜின் மைலேஜ் அதிகரிக்கும் வகையில் குறைந்தபட்ச உராய்வு இழப்பு , குறைவான என்ஜின் அழுத்தம் போன்றவற்றை தரும் வகையில் குரோம் பிளேட்டு பிஸ்டன் ரிங் மற்றும் ரோலர் கேம் ஃபாலோயர் பயன்படுத்தியுள்ளனர்.
டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கில் புதிய வசதிகளாக எந்த கிரில் இருந்தாலும் ஸ்டார்ட் ஆக வகையில் செயல்படும் எலக்ட்ரிக் ஸ்டார்ட் , ஸ்போர்ட்டிவ் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்டர் , குரோம் மஃப்லர் கார்ட் மற்றும் புதிய கிராப் ரெயில் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது.
முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் 5 வித அட்ஜெஸ்ட் கொண்ட சஸ்பென்ஷன் பயன்படுத்தியுள்ளனர். மேலும் முன்பக்கம் 130மிமீ மற்றும் பின்பக்கம் 110மிமீ டிரம் பிரேக்குகளை பெற்றுள்ளது.
வெள்ளை , கருப்பு , சிவப்பு , நீளம் மற்றும் கிரே என 5 விதமான வண்ணங்களுடன் புதிய பாடி ஸ்டிக்கரிங்குடன் டிவிஎஸ் ஸ்போர்ட் விற்பனைக்கு வந்துள்ளது.
டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் விலை ரூ.36,800 (டெல்லி எக்ஸ்ஷோரூம்)
2015 TVS Sport Launched with improved mileage