அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வரவுள்ள 125சிசி பஜாஜ் V12 பைக்கின் படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. பஜாஜ் வி பிராண்டில் வரவுள்ள இரண்டாவது மாடலாக வி12 விளங்கும்.
ஐஎன்எஸ் விக்ராந்த் போர்கப்பலின் மெட்டல் மெட்டல் பாகங்களை கொண்டு உருவாக்கப்பட்ட மாடலாக விற்பனைக்கு வந்த வி15 பைக் அமோக வரவேற்பினை பெற்று 1,00,000 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. அதே டிசைன் தாத்பரியங்களை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்ட வி12 பைக்கிலும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லாமல் வி15 மாடலை விட சில குறைவான வசதிகளை பெற்று 125சிசி என்ஜினை பெற்றுள்ளது.
இந்தியா இணையதளத்தில் வெளியாகியுள்ள ஸ்பை படங்கள் வாயிலாக வி12 பைக் பற்றி சில தகவல்களை தெரிந்துகொள்ளலாம். வி15 பைக் போல அல்லாமல் வி12 பைக்கில் 5 ஸ்போக் அலாய் வீல் , முன்பகத்தில் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் இல்லை , வி15 பைக்கினை போலவே இருக்கை மேல் அமைந்துள்ள கவுல் பேனல் , டிஸ்கவர் 125 என்ஜின் டிசைன் மாற்றப்பட்டுள்ளது. மேலும் வைன்ரெட் வண்ணத்தில் மட்டுமே முதலில் விற்பனைக்கு வரலாம்.
டிஸ்கவர் 125 பைக்கில் இடம்பெற்றுள்ள அதே 125சிசி என்ஜின் ஹெட் பகுதியில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுஇருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. வி12 பைக்கின் பவர் 11 ஹெச்பி மற்றும் 12 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தலாம். இதில் 5வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றறிருக்கும்.
தற்பொழுது பஜாஜ் V12 பைக்கிற்கு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதால் அடுத்த சில நாட்களில் வி12 விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பஜாஜ் டொமினார் 400 பைக் டிசம்பர் 15ந் தேதி விற்பனைக்கு வரவுள்ளதால் அதே அரங்கில் வி12 விற்பனைக்கு வரலாம். பஜாஜ் V12 பைக் விலை ரூ.56,200 (எக்ஸ்ஷோரூம்) ஆகும்.
பஜாஜ் வி12 படங்கள்
image source :india.com/auto