Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

பிஎஸ் 6 ஹோண்டா ஆக்டிவா 125 FI விற்பனைக்கான தேதி அறிவிப்பு

by automobiletamilan
September 6, 2019
in பைக் செய்திகள்

ஹோண்டா ஆக்டிவா 125 எஃப்ஐ

பாரத் ஸ்டேஜ் 6 அல்லது பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான என்ஜினை பெற்ற ஹோண்டா ஆக்டிவா 125 FI விற்பனைக்கு செப்டம்பர் 11 ஆம் தேதி வெளயிடப்பட உள்ளது. முந்தைய மாடலை விட குறைவான பவரை வெளிப்படுத்தும் மாடலாக ஆக்டிவா 125 எஃப்ஐ விளங்க உள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற ஸ்கூட்டர்களில் ஒன்றான ஆக்டிவா மாடலில் வரவுள்ள புதிய ஆக்டிவா 125 எஃப்ஐ பல்வேறு புதிய வசதிகளுடன் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் (PGM-FI – Programmed Fuel Injection) ஆதரவுடன் கூடிய 124சிசி HET என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 8.29 PS (6.10 KW) பவர் மற்றும் வெளிப்படுத்துவது உறுதியாகியுள்ளது. புதிதாக இந்த என்ஜினில் வழங்கப்பட்டுள்ள Honda’s Enhanced Smart Power (eSP) நுட்பத்தின் மூலம் சிறப்பான முறையில் அதிக ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக எரிபொருளுளை எரிக்கும் தன்மை கொண்டுள்ளது. இதன் காரணமாக சிறப்பான மைலேஜ் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விற்பனையில் உள்ள பிஎஸ் 4 மாடல் 6.35kw (8.52 hp) பவரை வெளிப்படுத்துகின்றது. எனவே புதிய மாடல் குறைவான பவரை வழங்குவது உறுதியாகியுள்ளது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 FI மாடல்  இரு சக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்யும் போது சத்தமில்லாமல் இருக்க ACG மோட்டார், ஐடியல் ஸ்டாப் ஸ்டார்ட் சிஸ்டம், முன்புற அப்ரானில் க்ளோவ் பாக்ஸ், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில், சைடு ஸ்டேண்டு இன்டிகேட்டர், நிகழ் நேரத்தில் எரிபொருள் சிக்கனத்தை அறிகின்ற வசதி, எல்இடி ஹெட்லைட்,  இருக்கை அடியில் உள்ள ஸ்டோரேஜ் மற்றும்  வெளிப்புறத்தில் உள்ள பெட்ரோல் நிரப்பிக் கொள்ள டூயல் ஸ்விட்ச் ஆப்ஷன் போன்றவறை பெற்றுள்ளது.

முன்பே இந்நிறுவனம் குறிப்பிட்டபடி விலை 10-15 சதவீதம் அதிகரிக்கும் என்பதனால் ஆக்டிவா 125 FI ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ. 71,000 (எக்ஸ்ஷோரூம்) என தொடங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

 

Previous Post

ரூ. 71,990 விலையில் ஒகினாவா பிரைஸ் ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது

Next Post

மீண்டும் ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவை அக்டோபரில் தொடங்கும் எம்ஜி மோட்டார்

Next Post

மீண்டும் ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவை அக்டோபரில் தொடங்கும் எம்ஜி மோட்டார்

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version