டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற அப்பாச்சி வரிசை பைக்குகளில் உள்ள அப்பாச்சி 160 மற்றும் அப்பாச்சி 180 போன்ற பைக் மாடல்களின் புதுப்பிக்கப்பட்ட மாடல் அடுத்த சில மாதங்களில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2017 டிவிஎஸ் அப்பாச்சி 160
விற்பனையில் உள்ள மாடலை விட கூடுதலாக பவரை வெளிப்படுத்தும் வகையிலான மாடலாக எதிர்பார்க்கப்பட உள்ள அப்பாச்சி ஆர்டிஆர் பைக்கின் தோற்ற அமைப்பிலும் குறிப்பிடதக்க பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்றிருக்கலாம் என கருதப்படுகின்றது.
வரவுள்ள புதிய மாடல் பைக் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மாடலின் டிசைனை பின்னணியாக கொண்டிருக்கலாம் என கருத்தப்படுகின்றது. தற்போது விற்பனையில் உள்ள மாடலான அப்பாச்சி 160 பைக்கில் 15.2 hp பவரை வெளிப்படுத்தும் 159.7சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. வரவுள்ள புதிய மாடலில் 16.0 ஹெச்பி ஆற்றல் அல்லது அதே ஆற்றலில் மாற்றம் இல்லாமல் எதிர்பார்க்கலாம், மேலும் விற்பனையில் உள்ள ஜிக்ஸெர், யமஹா FZ-S FI V 2.0 ஹார்னெட் 160, புதிய பல்சர் என்எஸ் 160 போன்ற மாடல்களுக்கு கடுமையான சவாலாக விளங்கும் வகையில் சிறப்பான ஆற்றல் மற்றும் ஸ்டைலிஷனான தோற்ற அமைப்பை கொண்டிருக்கும்.
மற்றொரு அப்பாச்சி வரிசை மாடலான ஆர்டிஆர் 180 மாடலும் புதிய தோற்ற பொலிவினை பெற்றதாக வரக்கூடும்என எதிர்பார்க்கப்படுகின்றது. விரைவில் டிவிஎஸ் நிறுவனத்தின் முதல் ஃபேரிங் செய்யப்பட்ட அப்பாச்சி ஆர்ஆர் 310 எஸ் பிரிமியம் பைக் வெளியாக உள்ள நிலையில் அப்பாச்சி வரிசையின் புதிய மாடல்கள் பற்றிய தகவல்கள் வெளியாகலாம்.
புதிய அப்பாச்சி 160 மற்றும் அப்பாச்சி 180 பைக்குகள் , இந்த வருடத்தின் இறுதி அல்லது அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் நடைபெற உள்ள 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
youtube link