நாளை அதாவது ஜனவரி 24, 2017 யில் இந்தியா யமஹா நிறுவனம் பிரிமியம் சந்தையில் 250சிசி என்ஜின் கொண்ட புதிய யமஹா FZ250 பைக் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. நேக்டு ஸ்போர்ட்டிவ் மாடலாக 250சிசி பைக் விளங்கும்.

யமஹா FZ 250/ FZ200

இந்த புதிய யமஹா பைக் 200சிசி அல்லது 250சிசி என்ஜினை பெற்ற மாடலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இந்திய யமஹா நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேப்பாட்டு பிரிவால் வடிவமைக்கப்பட்ட மாடல் என்பதனால் மிக சிறப்பான விலையை பெற்றிருக்கும்.

யமஹா எஃப்இசட் 250 என அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த பைக்கில் 20.5 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 250சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 20.5 என்எம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 5 அல்லது 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். சமீபத்தில் வெளிவந்த சோதனை ஓட்ட படங்கள் வாயிலாக விற்பனையில் உள்ள FZ15 பைக்கில் உள்ளதை போன்றே மிகவும் ஸ்டைலிசான பாடி அமைப்பினை பெற்றதாக விளங்குகின்றது.

மேலும் படிக்க – புதிய யமஹா ஆர் 15 பைக் அறிமுகம்

மிகவும் நேர்த்தியான டிசைன் , ஸ்ப்ளிட் இருக்கைகள் , டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் என பல வசதிகளை பெற்றதாக விளங்கும் இந்த மாடலில் ஏபிஎஸ் ஆப்ஷனும் இடம்பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. வருகின்ற ஜனவரி 24ந் தேதி யமஹா FZ 250 பைக் மாடல் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் டீலர்கள் வாயிலாக ரூ.10,000 செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.