வருகின்ற பண்டிகை காலத்தை ஒட்டி மஹிந்திரா மோஜோ டூரர் எடிசன் மாடலை ரூ.1.88 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. அட்வென்ச்சர் ஸ்போர்ட்டிவ் ரக மோஜோ மாடலின் டூரர் பைக் ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் வெளிவந்தது.
அதிகப்படியான சிறப்பு வசதிகளுடன் வெளிவந்துள்ள மோஜோ டூரர் பதிப்பில் சிறப்பான பல கூடுதல் துனைகருவிகள் இணைக்கப்பட்டுள்ளது. மோஜோவில் எவ்விதமான ஆற்றல் மாற்றங்கள் இல்லாமல் வந்துள்ளது.
27 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 4 ஸ்ட்ரோக் ஒற்றை சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 30 Nm ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மஹிந்திரா மோஜோ பைக் உச்ச வேகம் மணிக்கு 165கிமீ ஆகும். இதன் சராசரியாக மைலேஜ் லிட்டருக்கு 32கிமீ கிடைக்கும். முன்பக்கத்தில் 320மிமீ டிஸ்க் பிரேக்கும் , பின்பக்கத்தில் 240மிமீ டிஸ்க்கும் பயன்படுத்தியுள்ளனர்.
மோஜோ டூரர் சிறப்பு கருவிகள்
- மொபைல் ஹோல்டர்
- 13 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேக்னட்டிக் டேங்க் பேக்
- 38 லிட்டர் கொள்ளவு கொண்ட சேடில் பேக் மற்றும் கேரியர்
- பேன்னியர் மவுன்ட்
- 20W பனி விளக்குகள்
- இன்ஜின் , டேங்க் மற்றும் ரேடியேட்டர் தடுப்புகள்
மேலும் மோஜோ டூரர் எடிஷனில் சிறப்பு சலுகையாக மஹிந்திரா டூ விலர்ஸ் பிரிவால் தயாரிக்கப்பட்டு சிறப்பு டூரர் ஜாக்கெட் இலவசமாக வழங்குகின்றது. தொலைதூர பயணத்துக்கு ஏற்ற வகையில் சிறப்பான வசதிகளுடன் மிகசிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் மாடலாக விளங்குகின்றது.
மஹிந்திரா மோஜோ டூரர் எடிஷன் விலை ரூ. 1.88 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி)