Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

தமிழகத்தில் மஹிந்திரா மோஜோ பைக் விலை

by automobiletamilan
மார்ச் 15, 2016
in பைக் செய்திகள்

தமிழகத்தில் சென்னை , மதுரை , கோவை என மூன்று முன்னனி நகரங்களில் மஹிந்திரா மோஜோ பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  மஹிந்திரா மோஜோ பைக் விலை ரூ.1,71,600 ஆகும்.

mahindra-mojo (2)

முதற்கட்டமாக மும்பை , டெல்லி , பெங்களூரு மற்றும் புனே நகரங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மோஜோ தற்பொழுது 15 நகரங்களில் கூடுதலாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டள்ளது.

தற்பொழுது சென்னை , மதுரை , கோவை , கோல்கத்தா , அகமதபாத் , விசாகாபட்டினம் , சண்டிகர் , கோவா , குர்கான் , ஹைத்திராபாத் , இந்தூர் , ஜெய்ப்பூர் , நாக்ப்பூர் , விஜயவாடா மற்றும் லக்னோ போன்ற நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

அட்வென்ச்சர் ஸ்போர்ட்டிவ் ரக பைக்காக மிரட்டலான எல்இடி ரன்னிங் விளக்குகளுடன் இரட்டை பிரிவு வட்ட வடிவ முகப்பு விளக்குடன் நேர்த்தியாக உள்ளது. இரட்டை புகைப்போக்கிகளை கொண்டுள்ள சிறப்பான இருக்கை அமைப்பினை பெற்றுள்ள யூஎஸ்டி ஃபோர்க்குகளை கொண்டுள்ளது. வெள்ளை , கருப்பு மற்றும் சிவப்பு என மூன்று விதமான வண்ணங்களில் வந்தது.

mahindra-mojo-colour

27 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 4 ஸ்ட்ரோக் ஒற்றை சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 30 Nm ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

மஹிந்திரா மோஜோ பைக் உச்ச வேகம் மணிக்கு 165கிமீ ஆகும். இதன் சராசரியாக மைலேஜ் லிட்டருக்கு 32கிமீ கிடைக்கும்.

முன்பக்கத்தில் 320மிமீ டிஸ்க் பிரேக்கும் , பின்பக்கத்தில் 240மிமீ டிஸ்க்கும் பயன்படுத்தியுள்ளனர். தற்பொழுது ஏபிஎஸ் ஆப்ஷனாலாக இல்லை . ஏபிஎஸ் பிரேக் மாடல் தற்பொழுது சோதனையில் உள்ளதால் அடுத்த சில மாதங்களில் இறுதிக்கு வரலாம்.

சென்னை , மதுரை மற்றும் கோவை எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1,71,600 ஆகும்.

Mahindra-Mojo-White

Tags: Mahindra BikeMojoமோஜோ
Previous Post

2016 சுசூகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

Next Post

இந்தியாவின் முதல் ஓட்டுனரில்லா கார் – டாடா நானோ

Next Post

இந்தியாவின் முதல் ஓட்டுனரில்லா கார் - டாடா நானோ

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version