யமஹா மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் புதிய யமஹா ஃபேஸர் 25 மற்றும் யமஹா FZ25 என இரு பைக்குகளுக்கு இடையே உள்ள குறிப்பிட்ட சில முக்கிய வித்தியாசங்களை தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.
யமஹா ஃபேஸர் 25 Vs யமஹா FZ25
நெடுந்தொலைவு பயணங்களுக்கு ஏற்ற வகையில் ஸ்போர்ட்டிவ் டூரிங் மாடலாக ஃபேஸர் 25 பைக் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஸ்போர்ட்டிவ் நேக்டூ வெர்ஷன் மாடலான யமஹா FZ25 பின்னணியாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
FZ25 மற்றும் ஃபேஸர் 25 பைக்கில் புளூ கோர் எஞ்சின் நுட்பத்துடன் கூடிய ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் 249சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 20.9 ஹெச்பி பவரையும் 20 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
ஃபேரிங்
ஏரோடைனமிக்ஸ் அம்சத்தை பெற்ற ஃபேரிங் பேனல்களை கொண்டு மிக நேர்த்தியாக டூயல் எல்இடி ஹெட்லேம்ப் பெற்றதாகவும் வந்துள்ளது. சாதாரண மாடலை விட அகலமான ஏர் டேம் பெற்றதாக வந்துள்ளது.
எடை
நேக்டூ வெர்ஷன் மாடல் 148 கிலோ எடைபெற்றுள்ள நிலையில் ஃபேரிங் செய்யப்பட்ட மாடல் ஃபேசர் 25 154 கிலோ கிராம் எடை பெற்றுள்ளது.
டூயல் ஹார்ன் மற்றும் டூயல் எல்இடி ஹெட்லேம்ப்
ஒற்றை ஹார்ன் அல்ல இரண்டு ஹார்ன்களை ஃபேஸர் 25 பெற்றிருப்பதுடன் , இரண்டு பிரிவு பெற்ற எல்இடி விளக்குகள் மற்றும் எல்இடி டெயில் விளக்கினை பெற்றதாக வந்துள்ளது.
விலை
இரு மாடல்களுக்கு விலை சராசரியாக ரூ. 10,000 வரை வித்தியாசமாம் உள்ளது. யமஹா ஃபேஸர் 25 பைக் ரூ. 1.29 லட்சத்திலும், யமஹா FZ25 பைக் ரூ. 1.19 லட்சத்தில் கிடைக்கின்றது.