இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் யமஹா தனக்கே உரித்தான தனியான அங்கீகாரத்தை பெற்ற நிறுவனமாக விளங்குகின்றது. யமஹா எஃப்இசட்25 பைக் ரூ.1,19,500 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து யமஹாவின்அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் வாயிலாக பிப்ரவரி முதல் வாரத்தில் டெலிவரி தொடங்கப்பட உள்ளது. கவர்ச்சியான தோற்ற பொலிவுடன் மிக உறுதியான கட்டமைப்பினை பெற்ற எஃப்இசட்25 பைக்கில் உள்ள சில முக்கிய வசதிகளை தெரிந்துகொள்ளும் வகையிலான ஒரு முன்னோட்ட பார்வையாக இந்த செய்தி தொகுப்பு ஆகும்.

எஃப்இசட்25 ஸ்டைல்

நேக்டு ஸ்டீரிட்ஃபைட்டர் மாடல் பைக்குகளில் மிகவும் சிறப்பு வாய்ந்த டிசைன் வடிவத்தை பெற்றுள்ள எஃப்இசட்25 பைக்கில் முன்பக்க எல்இடி ஹெட்லேம்ப் , டெயிலில் எல்இடி விளக்கு போன்றவற்றுடன் எல்சிடி டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரை பெற்று இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையிலான கூர்மையான டிசைன் தாத்பரியங்களை பெற்று அசத்துகின்றது.

எஃப்இசட்25 எஞ்சின்

யமஹாவின் மிக சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் 20.9 ஹெச்பி பவருடன் , 20 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தக்கூடிய 249சிசி ஏர்கூல்டு ஆயில் கூலர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

யமஹா புளூ கோர் எரிபொருள் சிக்கனத்தை பெற்றுள்ள யமஹா எஃப்இசட்25 பைக் சராசரியாக ஒரு லிட்டருக்கு 43 கிமீ மைலேஜ் எதிர்பார்க்கப்படுகின்றது.

எஃப்இசட்25 இலகு எடை

போட்டியாளர்களுடன் ஒப்பீடுகையிலும் ஆயில் மற்றும் முழு பெட்ரோல் டேங்க நிரப்பிய பின்னரும் வெறும் 148 கிலோ எடையை மட்டுமே பெற்றுள்ளது. மிகவும் கட்டுறுதி மிக்க இலகு எடை உலோக பாகங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இலகு எடை கொண்டிருப்பதனால் சிறப்பான முறையில் FZ25 பைக்கை கட்டுப்படுத்தவும் , அதிகப்படியான எரிபொருள் சிக்கனத்தை தரவல்லதாக விளங்கும்.

எஃப்இசட்25 பிரேக்

முன்பக்க டயரில் 282மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கினை பெற்றுள்ளது. ஆனால் ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனலாக தற்சமயம் வழங்கப்படவில்லை.

 

எஃப்இசட் 25 விலை

போட்டியாளர்களான பல்சர் 200NS, டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V மற்றும் கேடிஎம் 200 டியூக் மாடல்களுடன் ஒப்பீடுகையில் விலை அதிகமாக தெரிந்தாலும் 250சிசி சந்தையில்யமஹாவின் FZ25 பைக் மிக சவாலான விலையிலே அமைந்துள்ளது என்பது உண்மையே…

யமஹா எஃப்இசட்25 பைக் விலை ரூ.1,19,500 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

யமஹா FZ25 பைக் படங்கள்