இந்திய யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய தொடக்கநிலை பைக் நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளது. க்ரூஸ் பைக் வெற்றியை தொடர்ந்து 100சிசி முதல் 110சிசி க்குள் அமையும் குறைந்த விலை யமஹா மோட்டார்சைக்கிள் ஆகும்.
8 bhp ஆற்றலை தரும் வகையில் 100சிசி முதல் 110சிசி வரையிலான இடைப்பட்ட நிலையில் இதன் என்ஜின் அமைந்திருக்கும். இதன் இழுவைதிறன் 8 Nm ஆக இருக்கலாம். இதில் யமஹா நிறுவனத்தின் பூளூ கோர் மைலேஜ் நுட்பத்தினை பெற்றிருக்கும்.
இதன் மூலம் இந்த தொடக்கநிலை பைக் சிறப்பான அதிக மைலேஜ் தரக்கூடிய வகையில் அமைந்திருக்கும். இந்த பைக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட வேரியண்ட் ஆப்ஷன் இருக்கும். இதன் மூலம் குறைந்த விலை மற்றும் சற்று கூடுதல் விலையில் கூடுதலான வசதிகளை பெற்றிருக்கும்.
இந்த மாடல் தொடக்கநிலை ஹீரோ பேஸன் புரோ , ஹோண்டா சிடி 110 , பஜாஜ்சிடி100 மற்றும் டிவிஎஸ் விக்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். நாளை அதிகார்வப்பூர்வமாக யமஹா புதிய பைக் மாடலை வெளியிட உள்ளது.
தொடர்ச்சி ; யமஹா சல்யூடோ ஆர்எக்ஸ் விற்பனைக்கு வந்தது