யமாஹா பைக் வளர்ச்சி 6% அதிகரிப்பு

யமாஹா நிறுவனத்தின் வளர்ச்சி 2011 ஆம் ஆண்டை விட 2012 ஆம் ஆண்டில் 6% வளர்ச்சி அதிகரித்து உள்ளது. இந்த வளர்ச்சிக்கான முக்கிய காரனங்களில் கடந்த செப்டம்பர் 2012யில் அறிமுகம் செய்யப்பட்ட யமாஹா ரே ஸ்கூட்டரும்  ஓன்று.

கடந்த 2011 ஆம் ஆண்டில் இந்தியளவில் 4,60,815 வாகனங்களை விற்றுள்ளது. 2012 ஆம் ஆண்டில் 4,87,290 வாகனங்களை விற்றள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த வளர்ச்சி 2011யை விட 2012யில் 6% உயர்ந்துள்ளது. மேலும் ஏற்றுமதி வளர்ச்சியும் 21% அதிகரித்துள்ளது. 2011யில் ஏற்றுமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 1,17,349. 2012யில் ஏற்றுமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 1,38, 884 ஆகும்.

yamaha ray scooter
 யமாஹா ரே ஸ்கூட்டர் இந்தியாவின் யமாஹாவிற்க்கும் மீண்டும் புதிய வளர்ச்சி பாதையை அமைத்து கொடுத்துள்ளது.  யமாஹா ரே பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. தற்பொழுது இந்தியாவில் யமாஹாவிற்க்கு 400 டீலர்கள் உள்ளன. வருகிற 2014 ஆம் ஆண்டிற்க்குள் 2000 டீலராக உயர்த்தயுள்ளது.
யமாஹா நிறுவனத்தின் புதிய Deputy MD ஆக MASAKI ASANA சில தினங்களுக்கு முன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Exit mobile version