ராயல் என்ஃபீலடு சர்ஃப் ரேஸர் பைக் அறிமுகம்..!

பிரான்சில் நடைபெற்ற வீல்ஸ் அன்ட் வேவ்ஸ் விழாவில் இரு கஸ்டமைஸ் பைக் மாடல்களை ராயல் என்ஃபீலடு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கான்டினென்டினல் GT அடிப்படையில் ராயல் என்ஃபீலடு சர்ஃப் ரேஸர் பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீலடு சர்ஃப் ரேஸர்

2017 வீல்ஸ் அன்ட் வேவ்ஸ் விழா பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற பொழுது இரு கஸ்டமைஸ் மாடல்களை சென்னையை சேர்ந்த ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஒரு மாடல் கான்டினென்டினல் GT மாடலை அடிப்படையாக கொண்ட ஜென்டில்மேன் பிரேட் மற்றும் சர்ஃப் ரேஸர் ஆகும்.

இங்கிலாந்தைச் சேர்ந்த சின்ரோஜா (Sinroja) மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் துனையுடன் மிக நேர்த்தியாக இரு மாடல்களும் கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது.

இலகுஎடை கொண்டதாக அட்டகாசமாக வடிவமைக்கப்பட்டுள்ள சர்ஃப் ரேஸர் மாடலில் கிரே வண்ணத்துடன் கூடிய ஃபேரிங் செய்யப்பட்டுள்ள பகுதியில் மிக நேர்த்தியான நீல வண்ணத்திலான ஸ்டிக்கரிங் வழங்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்கிற்கு மாற்றாக அப் சைடு டவுன் ஃபோர்க்குகள் பெற்றிருப்பதுடன், மிக நேர்த்தியான மோனோ ஷாக் அப்சார்பருடன் கம்பீரமான 535சிசி ஒற்றை சிலிண்டர் கான்டினென்டினல் GT எஞ்சின் பொருத்தப்படட்டுள்ளது.

நேர்த்தியாக விளங்கும் வகையில் 17 அங்குல வீல் , பைரேலி டைப்லோ சூப்பர்கோரஸா எஸ்பி டயர்கள் போன்றவற்றுடன் பிரெம்போ பிரேக்குகளை கொண்டதாக கம்பீரமாக காட்சியளிக்கின்றது.

Royal Enfield GT Surf Racer Image gallery

 

Share