ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் மாடல்கள் அதிகபட்சமாக ரூ.4500 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. 350சிசி க்கு குறைவான எஞ்சின் பெற்ற புல்லட்களும் கனிசமாக விலை உயர்ந்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு – ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு 350 சிசி க்கு குறைவான மோட்டார்சைக்கிள்மாடல்கள் விலை குறைந்திருப்பதுடன் 350சிசி க்கு மேற்பட்ட மாடல்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

என்ஃபீல்டு பைக்குகளின் வரிசையில் உள்ள 346 சிசி எஞ்சின் பெற்ற மாடல்களான புல்லட் ES , கிளாசிக் 350, தன்டர்பேர்டு 350 போன்ற மாடல்களின் விலை மிக குறைவாகவே சென்னை போன்ற சில இடங்களில் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் பெருவாரியாக ராயல் என்ஃபீல்டு மாடல்கள் அதிகபட்சமாக ரூ. 4500 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புல்லட் ES , கிளாசிக் 350, தன்டர்பேர்டு 350, புல்லட் 500, கிளாசிக் 500, கிளாசிக் க்ரோம் , தண்டர்பேர்டு 500 , கான்டினென்டினல் ஜிடி உள்பட ஹிமாலயன் என அனைத்து மாடல்களின் விலையும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை அதிகிரிக்கப்பட்டுள்ளது.

விலை உயர்வு மாநிலம் , மாவட்டம் வாரியாக மாறுபடும் என்பதனால் முழுமையான விபரத்திற்கு அருகாமையில் உள்ள டீலர்களை அனுகலாம்.

ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்ததை தொடர்ந்து ஆட்டோமொபைல்ஸ் பிரிவு 28 சதவிகிம் வரி பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தாலும், 350சிசி க்கு குறைவான எஞ்சின் பெற்ற மாடல்களுக்கு 28 சதவிகிதமும், 350சிசி க்கு அதிகமான எஞ்சின் பெற்ற மாடல்களுக்கு கூடுதல் 3 சதவிகித வரியுடன் சேர்த்து மொத்தமாக 31 சதவிகிதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.