120 ஆண்டுகளை கடந்துள்ள கவாஸாகி ஹெவி இன்டஸ்ட்ரீஸ் கொண்டாட்டத்தை ஒட்டி கவாஸாகி நின்ஜா 650 விலை ரூ.40,000 குறைக்கப்பட்டுள்ளது. கவாஸாகி நின்ஜா 650 பைக் விலை ரூ. 4,97,240 ஆகும்.
இருசக்கர வாகன துறையில் உலக அரங்கில் தனியான அடையாளத்துடன் வலம் வருகின்ற கவாஸாகி பைக்குகளுக்கு என்றுமே தனி ரசிகர்களின் பட்டாளம் இருந்து வருகின்றது. இந்த கொண்டாத்தில் வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் நோக்கில் இந்தியா கவாஸாகி மோட்டார் பிரிவும் ரூ.40,000 வரை சலுகை வழங்கியுள்ளது.
நின்ஜா 650 பைக்கில் 72.1 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 649சிசி ல்க்யூடூ கூல்டு பேரலல் ட்வீன் இஞஜின் இடம்பெற்றுள்ளது. இதன் டார்க் 64 Nm ஆகும்.நின்ஜா 650 பைக் இந்தியாவில் 2011 ஆம் ஆண்டு முதல் விற்பனையில் உள்ள நிலையில் முதலில் முழுவதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் பிறகு இந்தியாவிலே ஒருங்கினைக்கப்பட்டு வருகின்றது.
விற்பனையை அதிகரிக்கும் நோக்கிலே விலை சரிவினை கவாஸாகி அறிவித்துள்ளது. முந்தைய விலை ரூ. 5,37,420 ஆகும் . குறைக்கப்பட்ட விலை ரூ.4,97,240 ஆகும். (எக்ஸ்ஷோரூம் டெல்லி விலை)