தனது அனைத்து பைக் மற்றும் ஸ்கூட்டர்களிலும் புதிய நுட்பங்ளை புகுத்தி விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. அவற்றில் சில வசதிகள் பைக்களுக்கு புதிதாகும்.
ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட்
ஸ்பிளென்டர் பைக்கில் ஐ3எஸ் (i3s-idle start and stop system) என்ற புதிய நுட்ப்பத்தினை புகுத்தியுள்ளது. அதாவது வாகனத்தினை ஐடிலாக அல்லது நியூட்ரல் சமயங்களில் வீணாகும் எரிபொருளை தடுக்கும் வகையில் தானாவே என்ஜின் அனைந்துவிடும். வாகனத்தினை இயக்க முயற்சிக்க கிளட்ச்சினை பயன்படுத்தினாலே தானாகவே இயங்க ஆரம்பித்து விடும்.
மேலும் ஸ்பிளென்டர் பாடி கிராஃபிக்ஸ் , வண்ணங்கள், இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்ர் மற்றும் ஸ்டைலிங் போன்றவற்றை புதுப்பித்துள்ளது.
மேலும் ஸ்பிளென்டர் புரோ, சூப்பர் ஸ்பிளென்டர், பேஸன் புரோ டீலக்ஸ் மற்றும் எச்எஃப் டான் போன்ற பைக்களின் ஸ்டைல் மற்றும் பாடி கிராபிக்ஸ் போன்றவற்றை புதுப்பித்துள்ளது.
எச்ஃஎப் டீலக்ஸ் ஈக்கோ பைக்கில் புதிய ஏரோடைனமிக் கண்ணாடிகள் மற்றும் அதிகப்படியான டயர் உராய்வினை தடுக்ககூடிய நுட்பம் மற்றும் மைலேஜ் போன்றவற்றை அதிகரித்துள்ளது.
புதிய பிளசர் ஸ்கூட்டர்
பிளசர் ஸ்கூட்டரில் புதிய இன்ட்கிரேட்டட் பிரேக்கிங் அமைப்பினை ஹீரோ பொருத்தியுள்ளது. இந்த நுட்ப்மானது ஹோண்டா காம்பி பிரேக்கிங் அமைப்பினை போலவே இருக்கும். இதன் மூலம் பிளசர் பிரேக்கிங் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிளசர் ஸ்கூட்டரில் மொபைல் சார்ஜர் வசதி, லாக்கபல் குளோவ் பாக்ஸ், இருக்கையின் அடியில் உள்ள லக்கேஜ் பகுதியில் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது,
ஹீரோ சிபிஇசட் எக்ஸ்டீரிம்
சிபிஇசட் எக்ஸ்டீரிம் பைக்கில் பல புதிய வசதிகளை புகுத்தியுள்ளது. அவற்றில் குறிப்பாக இம்மொபைல்சர் அதாவது அதற்க்கேற்ற சாவியில்லை என்றால் வாகனத்தினை இயக்க முடியாது. மேலும் புதிய முகப்பு விளக்கு மற்றும் பாடி கிராபிக்ஸ் மாற்றப்பட்டுள்ளது.
ஹீரோ க்ரிஸ்மா ஆர் மற்றும் இசட்எம்ஆர்
ஹீரோ க்ரிஸ்மா ஆர் மற்றும் இசட்எம்ஆர் என இரண்டினையும் அமெரிக்காவின் எரிக் புயல் நிறுவனத்தின் துனையுடன் ஹீரோ மேம்படுத்தியுள்ளது.