Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஹோண்டா சிபி ஷைன் SP விற்பனைக்கு வந்தது

by automobiletamilan
நவம்பர் 19, 2015
in பைக் செய்திகள்

ஹோண்டா சிபி ஷைன் SP பைக் ரூ.69454 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி பைக் சிபி ஷைன் மாடலுக்கு மேலாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

ஹோண்டா சிபி ஷைன் SP

தற்பொழுது விற்பனையில் உள்ள சிபி ஷைன் மாடலில் உள்ள அதே என்ஜினை பெற்றிருந்தாலும் ஆற்றல் மற்றும் மைலேஜ் மேம்படுத்தப்பட்டுள்ளது.  மேலும் சிபி ஷைன் பைக்கிற்க்கு மாற்றாக சிபி ஷைன் SP வந்துள்ளது.

10.57 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 124.7சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 10.3 என்எம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

எச்இடி நுட்பத்துடன் வந்துள்ள ஷைன் எஸ்பி பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 65கிமீ ஆகும்.

முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் பின்புறத்தில் இரண்டு சாக் அப்சார்பர்களை பெற்றுள்ளது. மேலும் முன்பக்கத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 130மிமீ டிரம் பிரேக்கினை கொண்டுள்ளது. மேலும் காம்பி பிரேக்கிங் அமைப்பினை டாப் வேரியண்டில் கொண்டுள்ளது.

ஹோண்டா சிபி ஷைன் SP

மிக நேரத்தியான தோற்றத்தினை பெற்று விளங்கும் ஷைன் எஸ்பி பைக்கின் முகப்பு விளக்கு மிகவும் நேரத்தியாக லிவோ பைக்கின் உந்துதலுடனும் வைஷர் சிறப்பாக அமைந்துள்ளது. டிஜிட்டல் அனலாக் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

18 இஞ்ச் ட்வீன் ஸ்போக் அலாய் வீலை பெற்றுள்ள சிபி ஷைன் எஸ்பி பைக்கின் நீளம் 2007 மிமீ , அகலம் 762மிமீ மற்றும் உயரம் 1085 மிமீ ஆகும் மேலும் இதன் வீல்பேஸ் 1266மிமீ மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் 160மிமீ ஆகும்.

ஹோண்டா சிபி ஷைன் SP
ஹோண்டா சிபி ஷைன் SP

வெள்ளை , கருப்பு , நீலம் , கிரே மற்றும் சிவப்பு என 5 விதமான வண்ணங்களில் ஷைன் SP கிடைக்கும்.

போட்டியாளர்கள்

சிபி ஷைன் எஸ்பி பைக்கிற்க்கு ஹீரோ கிளாமர் , யமஹா சல்யூடோ , டிவிஎஸ் ஃபீனிக்ஸ்,  பஜாஜ் டிஸ்கவர் 125 மற்றும் சுசூகி சிலிங்ஷாட் போன்றவை போட்டியாக இருக்கும்.

ஹோண்டா CB ஷைன் SP பைக் விலை விபரம்

  • Honda CB Shine SP Drum – ரூ 69,454
  • CB Shine SP Disc – ரூ 72,182
  • CB Shine SP CBS – ரூ 74,365

{ அனைத்தும் சென்னை ஆன்ரோடு  விலை விபரம் }

ஹோண்டா சிபி ஷைன் SP
Honda CB Shine SP Launched price at Rs.59,900
Tags: HondaHonda Bikeசிபி ஷைன்சிபி ஷைன் SP
Previous Post

2016 ரேஞ்ச் ரோவர் எவோக் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

Next Post

விற்பனையில் டாப் 10 பைக்குகள் – அக்டோபர் 2015

Next Post

விற்பனையில் டாப் 10 பைக்குகள் - அக்டோபர் 2015

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version