Automobile Tamilan

100cc பைக்குகளின் ஆன்-ரோடு விலை பட்டியல் – மே 2023

இந்திய சந்தையில் சிறந்த மைலேஜ் வழங்கும் பைக்குகளில் 100cc என்ஜின் பெற்ற மாடல்களின் சிறப்பம்சங்கள் மற்றும் தமிழ்நாடு ஆன்ரோடு விலை பட்டியலை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

100cc-115cc பிரிவில் 14க்கு மேற்பட்ட மாடல்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது அவற்றில் 100cc பிரிவில் 5 பைக் மாடல்கள் மற்றும் ஒரு மொபெட் உள்ளன. இங்கே நாம் ஹீரோ HF 100, ஹீரோ HF டீலக்ஸ், ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ், ஹோண்டா ஷைன் 100 மற்றும் பஜாஜ் பிளாட்டினா 100 ஆன்-ரோடு விலை தொகுக்கப்பட்டுள்ளது.

2023 Hero HF 100

இந்தியாவின் குறைந்த விலை பைக் மாடலாக விளங்குகின்ற ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் HF 100 பைக்கில் 97.2 cc Fi, ஒற்றை சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இருபக்க டயர்களிலும் டிரம் பிரேக் கொடுக்கப்பட்டு கிக் ஸ்டார்டர் மட்டுமே கொண்டுள்ளது. இந்த மாடலில் இரண்டு விதமான நிறங்கள் கிடைக்கும்.

HF 100 பைக் அதிகபட்ச மைலேஜ் 68Kmpl-70kmpl வரை கிடைக்கின்றது.

 Hero HF 100
Engine Displacement (CC) 97.2 cc Fi, Single Cylinder
Power 7.9 bhp at 8000 rpm
Torque 8.05 Nm at 6000 rpm
Gear Box 4 Speed
Mileage (Internal) 81 Kmpl

2023 ஹீரோ HF 100 பைக்கின் ஆன்-ரோடு விலை ₹ 67,596

2023 Hero HF Deluxe

ஹீரோ நிறுவனத்தின் மற்றொரு 100cc பைக் மாடலான HF டீலக்ஸ் பைக்கின் பயன்பாட்டின் போது கிடைக்கின்ற அதிகபட்ச மைலேஜ் 70Kmpl ஆக உள்ளது. 97.2 cc Fi, ஒற்றை சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் 7.9 bhp பவரை 8000 rpm-ல் வழங்குகின்றது. இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற இரண்டாவது 100cc பைக் மாடலாகும். இந்த மாடலில் 9 விதமான நிறங்கள் கிடைக்கின்றது.

 Hero HF Deluxe
Engine Displacement (CC) 97.2 cc Fi, Single Cylinder
Power 7.9 bhp at 8000 rpm
Torque 8.05 Nm at 6000 rpm
Gear Box 4 Speed
Mileage (Internal) 81 Kmpl

2023 ஹீரோ HF டீலக்ஸ் பைக்கின் ஆன்-ரோடு விலை பட்டியல்

2023 Hero Splendor+

இந்தியாவின் முதன்மையான மோட்டார்சைக்கிள் மாடலாக விளங்குகின்ற ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளெண்டர்+ பைக்கில் ஸ்பிளெண்டர்+ XTech என கனெக்ட்டிவிட்டி வசதிகளை வழங்கும் மாடலும் விற்பனையில் உள்ளது. 100cc சந்தையில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொண்ட ஒரே மாடல் மற்றும் ப்ளூடுதல் வாயிலாக கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற்றுள்ளது. இதன் மூலம் அழைப்புகள், குறுஞ்செய்தி அறிவிப்புகள், நிகழ்நேரத்தில் மைலேஜ் அறியும் வசதி, I3s நுட்பம், சைடு ஸ்டாண்டு கட் ஆஃப் சுவிட்சு என பலவற்றை கொண்டு மொத்தமாக 15 விதமான மாறுபட்ட நிறங்களை கொண்டுள்ளது.

ஸ்பிளெண்டர் பிளஸ் பைக் அதிகபட்சமாக லிட்டருக்கு 68-70kmpl வரை கிடைக்கின்றது.

 Hero Splendor+
Engine Displacement (CC) 97.2 cc Fi, Single Cylinder
Power 7.9 bhp at 8000 rpm
Torque 8.05 Nm at 6000 rpm
Gear Box 4 Speed
Mileage (ARAI) 80 Kmpl

2023 ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் ஆன்-ரோடு விலை பட்டியல்

2023 Honda Shine 100

ஹோண்டா நிறுவனம் 100cc சந்தையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஷைன்100 பைக் மாடலில் 98.98cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 7.28 bhp பவர் 7500 rpm-ல் வெளிப்படுத்துகின்றது. குறிப்பாக ஹீரோ 100cc பைக்குகளுக்கு கடும் சவாலினை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

உறுதிப்படுத்தப்படாத ஹோண்டா ஷைன் 100 பைக் மைலேஜ் 65-70kmpl வழங்கலாம்.

 Hero Shine 100
Engine Displacement (CC) 98.98 cc Fi, Single Cylinder
Power 7.28 bhp at 7500 rpm
Torque 8.05 Nm at 6000 rpm
Gear Box 4 Speed
Mileage (ARAI) 80 Kmpl

2023 ஹோண்டா ஷைன் 100 பைக் ஆன்-ரோடு விலை ₹  82,564 உள்ளது.

2023 Bajaj Platina 100

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிளாட்டினா 100 பைக்கின் தரவுகளின் அடிப்படையில் லிட்டருக்கு 96 கிமீ வழங்கும் என குறிப்பிட்டுள்ளது. ஆனால் நிகழ்நேர மைலேஜ் லிட்டருக்கு 72 முதல் 75 கிமீ வரை கிடைக்கின்றது. பிளாட்டினா 100 பைக்கில் இருபக்க டயரில் டிரம் பிரேக் பெற்றுள்ளது.

   Bajaj Platina 100
Engine Displacement (CC) 102 cc DTS-i, Single Cylinder
Power 7.9 hp at 7500 rpm
Torque 8.3 Nm at 5500 rpm
Gear Box 4 Speed
Mileage (Internal) 96 Kmpl

2023 பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கின் ES டிரம் வேரியண்டின் ஆன்ரோடு விலை ₹ 79,227 ஆகும்.

கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆன்-ரோடு விலையும் டீலர்களுக்கு டீலர் மற்றும் அடிப்படையான கூடுதல் ஆக்சரீஸ் பாகங்கள் சேர்க்கப்படும்பொழுது மாறுபடும்.

Exit mobile version