கவாஸாகி நிறுவனம் புதிய கவாஸாகி Z1000 மற்றும் Z1000R சூப்பர் பைக் மாடல்களை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இசட்1000ஆர் பைக் மாடல் ஸ்பெஷல் எடிசன் மாடலாக வெளியிடப்பட்டுள்ளது.
2017 கவாஸாகி Z1000
- கவாஸாகி இசட்1000 பைக் விலை ரூபாய் 14.4 லட்சம்
- கவாஸாகி இசட்1000ஆர் பைக் விலை ரூபாய் 15.49 லட்சம்
- 141 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1043சிசி எஞ்சின் இடம்பெற்றுள்ளது.
இந்த பைக்கில் இடம்பெற்றுள்ள 1043சிசி எஞ்சின் அதிகபட்சமாக 10,000 ஆர்பிஎம் சுழற்சியில் 142 பிஹச்பி ஆற்றலையும், 7,300 ஆர்பிஎம் சுழற்சியில் 111 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இதில் ஆற்றலை சக்கரங்களுக்கு எடுத்து செல்ல 6 வேக கியர் பாக்ஸ் உள்ளது.
ஸ்பெஷல் எடிசன் கவாஸாகி இசட்1000ஆர் பைக் மாடலில் 41மிமீ இன்வெர்டேட் ஃபோர்க்குகள் முன்புறத்திலும், பின்புறத்தில் Ohlins S46DR1S ப்ரீலோடேட் அட்ஜெஸ்ட்டிங் சாக் அப்சார்பார் பொருத்தப்பட்டுள்ளது.
சாதாரண மாடலில் முன்பக்க டயரில் 310 மிமீ டிஸ்க் மற்றும் பின்புற டயரில் 250 மிமீ டிஸ்க் பிரேக் இடம்பெற்றுள்ளது. மேலும் Z1000R மாடலில் Brembo M50 மோனோபிளாக் காலிபர் முன்புறத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
2017 கவாஸாகி Z1000 பைக்கில் கருப்பு நிறத்துடன் கூடிய பச்சை நிறத்திலும், கவாஸாகி Z1000R கருப்பு நிறுத்துடன் கூடிய கிரே வண்ணத்தை பெற்றுள்ளது.
புதிய கவாஸாகி இசட்1000 பைக் ரூ.14.4 லட்சம் மற்றும் கவாஸாகி இசட்1000 பைக் ரூ.15.49 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.