பாரத் ஸ்டேஜ் 4 தர மாசு கட்டுப்பாடு என்ஜின் மற்றும் ஏஹெச்ஓ ஆப்ஷனை பெற்ற 2017 டிவிஎஸ் அப்பாச்சி 200 ஆர்டிஆர் 4வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அப்பாச்சி 200 ஆர்டிஆர் 4வி
- பிஎஸ் 4 தர மாசு கட்டுப்பாடு என்ஜினை பெற்றதாக அப்பாச்சி 200 ஆர்டிஆர் 4வி வந்துள்ளது.
- ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆன் வசதியை பெற்றுள்ளது.
- எப்ஃஐ மாடல் குறித்தான எந்த தகவலும் வெளியிடப்படவில்லை
மேம்படுத்தப்பட்ட பிஎஸ் 4 தரத்துடன் 198cc ஆயில் கூல்டு இஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 20 பிஹச்பி ஆற்றலையும், 18 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உள்ள அப்பாச்சி 200 பைக்கில் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது.
தோற்ற அமைப்பில் எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் கூடுதலாக ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆன் வசதியை பெற்றதாக வந்துள்ளது. ஹெட்லைட் ஆன் சுவிட்ச் மட்டுமே நீக்கப்பட்டுள்ளது.
புதிய அப்பாச்சி RTR 200 4V விலை ரூ. 97,800 (எக்ஸ்-ஷோரூம் மும்பை) மற்றும் பைரேலி ஸ்போர்ட் டிமோன் டயர்கள் பொருத்தப்பட்ட மாடல் விலை ரூ. 1,06,000 லட்சம் ஆகும். ஃப்யூவல் இன்ஜெக்ஷ்ன் பொருத்தப்பட்ட மாடல் குறித்து எவ்விதமான அதிகார்வப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. புதிய அப்பாச்சி 200 பைக்கின் நேரடியான போட்டியாளர்கள் பல்சர் 200 என்எஸ் மற்றும் யமஹா FZ25 ஆகும்.
a