Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

2017 ராயல் என்ஃபீல்டு புல்லட் 500 FI விற்பனைக்கு வந்தது

by automobiletamilan
April 7, 2017
in பைக் செய்திகள்

பாரத் ஸ்டேஜ் 4 தர மாசு கட்டுப்பாடு எஞ்சினை பெற்ற ராயல் என்ஃபீல்டு புல்லட் 500 ரூ. 1.62 லட்சம் விலையில் எலக்ட்ரானிக் ஃப்யூவல் இன்ஜெக்சன் பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆற்றல் மற்றும் டார்க் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 ராயல் என்ஃபீலடு புல்லட் 500

  • 27.2 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் பிஎஸ் 4 தர எஞ்சினில் EFI பெற்றுள்ளது.
  • எலக்ட்ரானிக் ஃப்யூவல் இன்ஜெக்சன் வசதியை பெற்றுள்ளது.
  • மோட்டார்சைக்கிள் அரசனாக தொடர்ந்து புல்லட் 500 விளங்குகின்றது.
  • கிரே , பச்சை மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கும்.

பாரம்பரிய தோற்றத்திலே தொடர்ந்து விற்பனை செய்யப்படுகின்ற பிரத்யேகமாக புல்லட் 500 பைக்கில்  பாரத் ஸ்டேஜ் 4 தர 499சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு முந்தைய மாடலை விட கூடுதலாக  அதிகபட்சமாக 27.2 பிஹெச்பி ( 26.1 bhp முந்தைய ஆற்றல்) ஆற்றலுடன் , 41.3 என்எம் ( 40.9 Nm முந்தைய டார்க்) டார்க்கினை  வெளிப்படுத்தும் எலக்ட்ரானிக் ஃப்யூவல் இன்ஜெக்ஷ்ன் வசதியை பெற்றுள்ளது.  இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ இடம்பெற்றுள்ளது.

வேறு எவ்விதமான மாற்றங்களும் இடம்பெறாமல் முந்தைய வசதிகளுடன் தொடர்கின்றது. முன்புறத்தில் 35 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் ,பின்புறத்தில் இரட்டை சாக் அப்சார்பரை பெற்று விளங்குகின்றது. முன்பக்க டயரில் இரட்டை பிஸ்டன் கேலிபரை பெற்ற  280 டிஸ்க் பிரேக், பின்பக்க டயரில் 153 மிமீ டிரம் பிரேக்கினை பெற்று விளங்குகின்றது. 13.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட புல்லட் எடை 194 கிலோ ஆகும்.

மாபெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்று விளங்குகின்ற ராயல் என்ஃபீலடு புல்லட் 500 மாடலின் விலை ரூ. 1.62 லட்சம் ஆகும்.

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் பிஎஸ் 4 எஞ்சினை பெற்ற ஹிமாலயன்,   தண்டர்பேர்ட் 500, கிளாசிக் 500 மற்றும் கான்டினென்ட்டல் GT போன்ற மாடல்கள் எஃப்ஐ ஆப்ஷனுடன் கிடைக்கின்றது. கிளாசிக் 350 மற்றும் தண்டர்பேர்ட் 350 என இரு மாடலும் பி.எஸ் 4 எஞ்சின் பெற்றிருந்தாலும் கார்புரேட்டர் மாடலாகவே விற்பனை செய்யப்படுகின்றது.

அனைத்து புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிளும் பிஎஸ் 4 எஞ்சினுடன் ஏஹெச்ஒ ஆப்ஷனை பெற்றுள்ளதால் அதிகபட்சமாக ரூபாய் 6,000 வரை விலை அதிகரித்துள்ளது.

 

Tags: Royal Enfieldபுல்லட் 500
Previous Post

லம்போர்கினி ஹூராகேன் பெர்ஃபாமென்டி விற்பனைக்கு வந்தது

Next Post

2017 யூஎம் ரெனிகேட் கமாண்டோ , ஸ்போர்ட் விற்பனைக்கு அறிமுகம்

Next Post

2017 யூஎம் ரெனிகேட் கமாண்டோ , ஸ்போர்ட் விற்பனைக்கு அறிமுகம்

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version