ரூ.21.7 லட்சத்தில் டுகாட்டி டியாவெல் டீசல் டெலிவரி தொடங்கியது

இந்தியாவில் ரூ.21.7 லட்சம் விலையில் டுகாட்டி டியாவெல் டீசல் ஸ்பெஷல் எடிசன் சூப்பர் பைக் மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. டியாவெல் டீசல் பைக்கில் 666 மாடல்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.

டுகாட்டி டியாவெல் டீசல்

  •  டுகாட்டி டியாவெல் டீசல் பைக்குகள் 666 அலகுகள் மட்டுமே இந்த சிறப்பு பதிப்பில் தயாரிக்கப்பட உள்ளது.
  • டுகாட்டி மற்றும் டீசல் கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ளது.
  • விற்பனை செய்யப்பட உள்ள 666 பைக்குகளிலும் தயாரிப்பு எண்கள் கொண்ட பேட்ஜ் சேர்க்கப்பட்டிருக்கும்.

சாதரன டியாவெல் சூப்பர் பைக்கில் இடம்பெற்றுள்ள என்ஜின் மற்றும் சிறப்பம்சங்களை பெற்றிருந்தாலும் தோற்ற அமைப்பில் டீசல் நிறுவனத்துடன் இணைந்து பல மாற்றங்களை டுகாட்டி தந்துள்ளது. டியாவெல் டீசல் மாடலில் 1198 cc L-Twin என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 160 bhp ஆற்றலுடன் 130.5 Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது.

டுகாட்டி டிசைன் மையம் மற்றும் டீசல் பிராண்டு க்ரியேட்டிவ் இயக்குநர் ஆன்டிரியா ரோஸா கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு பதிப்பு மாடலில் பொருத்தப்பட்டுள்ள இருக்கை உறைகள் உயர்தர லெதர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் டுகாட்டி டியாவெல் டீசல் சிறப்பு பேட்ஜ் பிளேட் பதிக்கபட்டு இந்த பேட்ஜில் 666 பைக்குகளில் தயாரிக்கப்பட்ட எண்ணிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகயளவிலே 666 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.

ஆரம்பத்தில் டியாவெல் டீசல் ரூ.19.92 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில் ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு பின்னர் ரூ.21.7 லட்சம் விலை உயர்த்தப்பட்டுள்ளது. (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

டுகாட்டி டியாவெல் டீசல் படங்கள்