Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

வெளியானது பியூஜியோட் மாக்ஸி ஸ்கூட்டர் சோதனை செய்யும் படங்கள்

By MR.Durai
Last updated: 30,July 2018
Share
SHARE

பியூஜியோட் மாக்ஸி ஸ்கூட்டர் நிறுவனம் 2019 மாடலை விரைவில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பியூஜியோட் மாக்ஸி ஸ்கூட்டரின் மேம்படுத்தப்பட்ட மாடல் பியூஜியோட் சிட்டிஸ்டார் ஸ்கூட்டர் தனியார் டிராக்கில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த சோதனை குறித்து வெளியான தகவலின் படி, பியூஜியோட் சிட்டிஸ்டாரின் பாடி முழுவதுமாக மறைக்கப்பட்ட நிலையில் சோதனை நடத்தப்பட்டதால், இந்த ஸ்கூட்டரில் எந்த வகையான அலங்கார வடிமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று நிர்ணயிக்க முடியவில்லை. இருந்தபோதும் இந்த சோதனை செய்யும் புகைப்படங்களின் மூலம் இந்த வாகனத்தின் அளவு தற்போதைய மாடல் ஸ்கூட்டர்களை விட பெரியதாக உள்ளது என்று தெரிய வந்துள்ளது.

தற்போது பியூஜியோட் ஸ்கூட்டர்களில் 500cc முதல் 400cc வகையிலான இன்ஜின்களுடன் மூன்று வீல்களுடன் தலைநகரங்களில் வெளியாகியுள்ளது. பியூஜியோட் சிட்டி ஸ்டாரில், இரண்டு வகையான ஆப்சன்கள் உள்ளன. ஒன்று, 125cc இன்ஜின் மற்றும் முன்னணி மாடல்கள் 200cc இஞ்சினுடனும் வெளியாக உள்ளது.

200cc எரிபொருள்-இன்ஜெக்ஷடைடு மோட்டர்கள் 14 bhp மற்றும் முன்புற மற்றும் பின்புறத்தில் ஹைடிராலிக் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டும், 13 இன்ச் வீல்கள் மற்றும் சீட்டின் அடியில் முழு முகத்தை மறைக்கும் மற்றும் பாதியலவிலான முகத்தை மறைக்கும் ஹெல்மெட்களை வைத்து கொள்ளும் அளவிலான ஸ்டோரஜ்களும் இடம் பெற்றுள்ளது.

இதுமட்டுமின்றி சிட்டிஸ்டார்கள் சில வகையான ஆப்ச்னல் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளது. அதாவது ஹை விண்டுஷீல்டு, லக்கேஜ் ராக், விண்டு டிப்லேக்டர் மற்றும் டாப் பாக் இவைகளுடன் 30 லிட்டர் அளவுடன் வெளியாகும்.

தற்போது பியூஜியோட் ஸ்கூட்டர் இந்தியாவில் எந்த ஸ்கூட்டரையும் விற்பனை செய்யவில்லை, ஆனாலும், மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனம் பியூஜியோட் நிறுவனத்தின் 51 சதவிகித பெரும்பாலான பங்குகளை வாங்கியுள்ளது. இந்நிலையில், பியூஜியோட் நிறுவனம் 125cc ஸ்கூட்டர்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய உள்ளதாக வதந்தியும் பரவி வருகிறது.

பியூஜியோட் நிறுவன பங்குகளை வாங்கி நான்கு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனம், பியூஜியோட் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்யும் திட்டங்கள் எதையும் இதுவரை கொண்டிருக்கவில்லை.

பியூஜியோட் சிட்டிஸ்டார்கள் ஐரோப்பாவில் தற்போது அறிமுகம் செய்ய உள்ளது. ஆனாலும், தற்போது வாடிக்கையாளர்கள் ஸ்கூட்டர்களில் ஆர்வம் காட்டுவது அதிகரித்துள்ளதால் (குறிப்பாக 125cc வகைகளில்) பியூஜியோட் நிறுவனம் சில ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமும் செய்ய இதுவே சரியான நேரமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

தற்போது பியூஜியோட் மேக்ஸி ஸ்கூட்டர்கள் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது, அதுமட்டுமின்றி சமீபத்தில் 125cc சுசூகி பர்க்மான் ஸ்டீரிட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2025 ather community day launches 1
ஏதெர் எனர்ஜி ஃபாஸ்ட் சார்ஜர், ஏதெர்ஸ்டேக் 7.0 மேலும் பல..,
ஏதெர் Redux ஸ்போர்ட்டிவ் மின்சார மோட்டோ-ஸ்கூட்டர் அறிமுகம்
ஏதெர் 450 ஏபெக்ஸ் ஸ்கூட்டரில் க்ரூஸ் கண்ட்ரோல் அறிமுகமானது
ஏதெர் ரிஸ்டா ஸ்கூட்டரில் தொடுதிரை மற்றும் புதிய நிறங்கள்
மேக்ஸி ஸ்டைலில் ஏதெர் EL01 கான்செப்ட் வெளியானது
TAGGED:Peugeot Maxi
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
honda qc1 e scooters
Honda Bikes
ஹோண்டா QC1 எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
triumph speed 400 bike on-road price
Triumph
டிரையம்ப் ஸ்பீட் 400 பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
xtreme 125r
Hero Motocorp
2025 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R விலை, மைலேஜ், படங்கள் மற்றும் சிறப்புகள்
பல்சர் 125 பைக்
Bajaj
பஜாஜ் பல்சர் 125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms