புதிய சுஸூகி V-ஸ்டார்ம் 650 XT ஏ.பி.எஸ் விற்பனைக்கு வந்தது

7.46 லட்சம் ரூபாய் விலையில் 2019 சுஸூகி V-ஸ்டார்ம் 650 XT ஏ.பி.எஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. புதிய மாடலில் சிறிய அளவிலான மாற்றங்கள் மட்டும் கொண்டுள்ளது.

சுஸூகி V-ஸ்டார்ம் 650 XT ஏ.பி.எஸ்

நடுத்தர அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற சுஸூகி V-ஸ்டார்ம் 650 XT ஏ.பி.எஸ் மாடலில் ஹாஸார்ட் விளக்குகள் மற்றும் ரிஃப்லெக்டர் உடன் புதிதாக கிராபிக்ஸ் மட்டும் இணைக்கப்பட்டுள்ளது. மற்றபடி எவ்விதமான மாற்றங்களும் இடம்பெறவில்லை.

இந்தியாவில் பாகங்களை தருவித்து ஒருங்கிணைக்கப்படுகின்ற வி – ஸ்ட்ராம் 650 எக்ஸ்டி மாடலில் 645cc, லிக்யுட்-கூல்டு, நான்கு ஸ்ட்ரோக், V ட்வீன் இன்ஜின் கொண்டு 70bhp பவர் மற்றும் 66Nm டார்க் கொண்டதாக விளங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. V-ஸ்டார்ம் 650 XT மோட்டார் சைக்கிள்களின்  எடை 213 கிலோ கிராமாக உள்ளது.

வி – ஸ்ட்ராம் 650 எக்ஸ்டி மோட்டார் சைக்கிளில், 18 இன்ச் முன்புற வீல் மற்றும் 17 இன்ச் ரியர் வீல் மற்றும் வழக்கமான டுயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் ஆகியவற்றை கொண்டுள்ளது. ஏபிஎஸ் பிரேக் வசதி சுவிட்ச் ஆப் செய்யும் ஆப்ஷன் வழங்கப்படவில்லை. இதில் இடம் பெற்றுள்ள எலெக்ட்ரானிக் வசதிகளை பொறுத்தவரை, V-ஸ்டார்ம் 650 XT மோட்டார் சைக்கிள்களில் இரு விதமான டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதை தேவைப்பட்டால் சுவிட்ச் ஆப் செய்து கொள்ள முடியும்.

சுஸூகி V-ஸ்டார்ம் 650 XT ஏ.பி.எஸ் பைக் விலை ரூபாய் 7.46 லட்சம் ஆகும்.