ஜனவரியில் புதிய யமஹா FZ V3 பைக் அறிமுகம்

ஸ்போர்ட்டிவ் பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தும் யமஹா FZ பைக்கின், மேம்படுத்தப்பட்ட புதிய யமஹா FZ V3 பைக் ஜனவரி 21, 2019-யில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

சமீபத்தில் முழுமையான உற்பத்தி நிலையை பெற்ற FZ V3 பைக் சோதனை செய்யப்படுகின்ற படங்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வருகின்ற ஜனவரி 21ந் தேதி புதுமையான ரேசிங் அனுபவத்தை வழங்கும் மாடலை வெளியிட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே மிக அதிகப்படியாக பைக் மாடலே வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அனேகமாக இந்த பைக் யமஹா FZ V3 அல்லது யமஹா R15 V3 மாடலாக இருக்கலாம்.

சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள FZ V3 மிக நேர்த்தியான ஷார்பிங் எட்ஜ் கொண்ட புதுப்பிக்கப்பட்ட பெட்ரோல் டேங்க், இரட்டை பிரிவு இருக்கைகளுக்கு மாற்றாக சிங்கிள் சீட், 10 ஸ்போக்கினை பெற்ற புதிய வடிவிலான 17 இன்ச் அலாய் வீல், முன்புற விளக்கு புதுப்பிக்கப்பட்டு எல்இடி ஹெட்லேம்பை பெற்றிருப்பதுடன், பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்கு, புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் என பல்வேறு அம்சங்களை பெற்றிருக்கும்.

வருகின்ற ஏப்ரல் 1, 2019 முதல் 125 சிசி மற்றும் அதற்கு கூடுதலான பைக்கில் ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனலாக வழங்கப்பட வேண்டும் என்பதனால் யமஹா FZ V3 பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் அடிப்படையாக இடம்பெற வாய்ப்புள்ளது. என்ஜின் தொடர்பான மாற்றங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை, இருந்தபோதும் 149சிசி என்ஜின் புதுப்பிக்கப்பட்ட சிறப்பான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தும் வகையில் 13 ஹெச்பி பவர் மற்றும் 12.8 என்எம் டார்க் வழங்குவதுடன் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

வருகின்ற ஜனவரி 21ந் தேதி புதிய மாடலை வெளியிட உள்ள இந்தியா யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனம் , எந்த மாடலை வெளியிட உள்ளது என காத்திருந்து அறிந்து கொள்ளலாம்.

spy image – bikeadvice.in

Share