புதிய OBD2 மற்றும் E20 மேம்பாடு பெற்ற 2023 ஹோண்டா ஹார்னெட் 2.0 விற்பனைக்கு ரூ.1.39 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடல் 5 வேக கியர்பாக்ஸ் உடன் அசிஸ்ட் சிலிப்பர் கிளட்ச் பெற்றதாக வந்துள்ளது.
மற்றபடி, இந்த புதிய பைக்கில் தொடர்ந்து ரெட் மெட்டாலிக், ப்ளூ மெட்டாலிக், கிரே மெட்டாலிக் மற்றும் கருப்பு என நான்கு நிறங்களை பெற்று ஸ்போர்ட்டிவான தோற்ற அமைபமினை கொண்டதாக அமைந்துள்ளது.
2023 Honda Hornet 2.0
OBD2 மற்றும் E20 ஆதரவினை பெற்ற ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்கில் உள்ள 184cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு PGM-FI HET (Honda Eco Technology) இன்ஜின் 8500 RPM-ல் 17.03 hp பவர் மற்றும் 6000 RPM-ல் 16.1 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உடன் தற்பொழுது சிஸ்ட் சிலிப்பர் கிளட்ச் இடம்பெற்றுள்ளது.
டைமண்ட் வகை சேஸ் கொண்டுள்ள ஹார்னெட் 2.0-வில் சஸ்பென்ஷனை பொறுத்தவரை முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ள கோல்டு நிறத்தை பெற்ற யூஎஸ்டி ஃபோர்க்கு கவர்ச்சிகரமாக விளங்குவதுடன், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் இணைக்கப்பட்டுள்ளது.
இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு, முன்புறத்தில் 276mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 220mm டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது. 17 அங்குல அலாய் வீல் பெற்று முன்புறத்தில் 110/70 டயர் மற்றும் பின்புறத்தில் அகலமான 140/70 டயர் கொடுக்கப்பட்டுள்ளது.
2023 ஹோண்டா ஹார்னெட் 2.0 விலை ரூ.1,39,000 (தமிழ்நாடு எக்ஸ்-ஷோரூம்)