ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம், SP125 பைக்கில் ஸ்போர்ட்ஸ் எடிசன் என்ற பெயரில் சிறப்பு பதிப்பை பண்டிகை காலத்தை முன்னிட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
ஸ்டைலிஷான பாடி கிராபிக்ஸ் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. மற்றபடி, வேறு எவ்விதமான மாற்றங்களும் இல்லை.
Honda SP125 Sports Edition
SP125 பைக்கில் OBD2 மற்றும் E20 மேம்பாடு பெற்று அதிகபட்சமாக 10.8hp குதிரைத்திறன், 10.9Nm டார்க் வெளிப்படுத்தும் 123.94cc, ஏர்-கூல்டு, ஃப்யூவல்-இன்ஜெக்டட் இன்ஜின் பெற்று, ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா SP125 பைக்கில் LED ஹெட்லைட் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த கிளஸ்ட்டரில் நிகழ்நேர எரிபொருள் இருப்பினை காட்டுகிறது.
SP125 ஸ்போர்ட்ஸ் எடிஷன் பைக்கில், வழக்கமான டேங்க் டிசைன், மேட் நிறத்திலான மப்ளர் கவர் மற்றும் மேம்படுத்தப்பட்ட கிராபிக்ஸ் மற்றும் பாடி பேனல்கள் மற்றும் அலாய் வீல புதிய கோடுகளும் கொண்டுள்ளது. இது கவர்ச்சிகரமான டீசென்ட் ப்ளூ மெட்டாலிக் மற்றும் ஹெவி கிரே மெட்டாலிக் என இரு நிறங்களில் கிடைக்கும்.
ஹோண்டா SP125 ஸ்போர்ட்ஸ் எடிஷனின் விலை ரூ. 92,567 (எக்ஸ்-ஷோரூம், தமிழ் நாடு). HMSI தனது மோட்டார்சைக்கிள்களுக்கு சிறப்பு 10 ஆண்டு வாரண்டி தொகுப்பையும் (3 வருட தரநிலை + 7 வருட விருப்பத்தேர்வு) வழங்குகிறது.