செய்திகள்

புதிய ஜாவா 42 மற்றும் யெஸ்டி ரோட்ஸ்டெர் விற்பனைக்கு அறிமுகமானது

ஜாவா 42 பைக்கில் டூயல் டோன் கொண்ட நிறங்கள் மற்றும் யெஸ்டி ரோட்ஸ்டெர் பைக்கின் ரைடிங் முறை க்ரூஸருக்கு இணையாக மாற்றப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட ஜாவா 42 டூயல் டோன் விலை ₹ 1.98 லட்சம் ஆகவும், புதுப்பிக்கப்பட்ட யெஸ்டி ரோட்ஸ்டெர் விலை ₹ 2.09 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Jawa 42 and yezdi Roadster

2023 ஜாவா 42 பைக்கில் டூயல் டோன் நிறங்கள், தெளிவான லென்ஸ் இண்டிகேட்டர், ஷார்ட்-ஹேங் ஃபெண்டர், புதிய எரிபொருள் டேங்க் மற்றும் டயமண்ட்-கட் அலாய் வீல், புதுப்பிக்கப்பட்ட இருக்கை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும், மோட்டார்சைக்கிளில் எஞ்சின் மற்றும் எக்ஸாஸ்டில் பிளாக்-அவுட் ஃபினிஷ் உள்ளது.

காஸ்மிக் ராக், இன்ஃபினிட்டி பிளாக், ஸ்டார்ஷிப் ப்ளூ மற்றும் செலஸ்டியல் காப்பர் ஆகிய நான்கு டூயல்-டோன் வண்ணங்களில் 42 கிடைக்கிறது.

ஜாவா 42 பைக் மாடலில் தொடர்ந்து 294.7சிசி, லிக்யூடு கூல்டு என்ஜின் மூலம் அதிகபட்சமாக 27 bhp மற்றும் 26.8 Nm டார்க்கை வழங்குகிறது. இந்த மாடலில் ஆறு வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

அடுத்து, யெஸ்டி ரோட்ஸ்டெர் பைக்கில் க்ரூஸர் மாடலுக்கான அமைப்பினை வழங்க ஃபூட் பெக்  முன்புறம் மாற்றப்பட்டு, உயரம் அதிகரிக்கப்பட்ட ஹேண்டில் பார் உள்ளது.

யெஸ்டி ரோட்ஸ்டெர் பைக் மாடலில் தொடர்ந்து 294.7சிசி, லிக்யூடு கூல்டு என்ஜின் மூலம் அதிகபட்சமாக 29 bhp மற்றும் 28.9 Nm டார்க்கை வழங்குகிறது. இந்த மாடலில் ஆறு வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

This post was last modified on September 30, 2023 5:38 AM

Share