Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

புதிய வசதிகளுடன் யமஹா R15 V4 & R15M விற்பனைக்கு வெளியானது

by automobiletamilan
February 13, 2023
in பைக் செய்திகள்
3
SHARES
0
VIEWS
ShareRetweet

2023 Yamaha R15M

இந்தியாவின் பிரசத்தி பெற்ற யமஹா R15 V4 மற்றும் R15M பைக்கில் கூடுதலாக TFT டிஸ்பிளே கிளஸ்ட்டர், ஸ்மார்ட்போன் ஆதரவுடன் OBD-2 மற்றும் E20 எரிபொருள் பயன்படுத்தும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

இழுவை கட்டுப்பாட்டு அமைப்பு (Traction Control System – TCS) சேர்க்கப்பட்டு இதற்காக பிரத்யேக மின்னணு அமைப்பின் மூலம் வீல் ஸ்பின் ஆகி சாலைகளில் ஏற்படும் டிராக்‌ஷன் இழப்பினை ஈடுகட்டி வாகனம் நிலை தடுமாறுவதனை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

யமஹா R15M & R15 V4

R15M மாடலில் இப்போது ஸ்மார்ட்ஃபோன் இணைப்பு, பகல்/இரவு முறைகள், பார்க்கிங் இடம் மற்றும் ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ட்ரிப் மீட்டர், எரிபொருள் நிலை மற்றும் கியர் பொசிஷன் இண்டிகேட்டர் போன்ற வசதிகளை வழங்கும் புதிய TFT திரையுடன் பொருத்தப்பட்டுள்ளது. யமஹா எல்இடி டர்ன் இண்டிகேட்டர்களுடன் பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது.

R15 V4 மற்றும் R15M என இரண்டிலும் 155சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யூடு-கூல்டு VVA என்ஜின் அதிகபட்சமாக 18.1bhp மற்றும் 14.2Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் USD ஃபோர்க்குகள் மற்றும் மோனோஷாக் ஆகியவற்றை பெற்றுள்ளது.

R15 V4 TFT Console scaled

282 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 220 மிமீ டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 17-இன்ச் அலாய்களில் பொருத்தப்பட்டுள்ளது.

Yamaha R15 V4 பைக் விலை மாறாமல் உள்ளது. கூடுதலாக, மெட்டாலிக் ரெட் மற்றும் டார்க் நைட் நிறம் சேர்க்கப்பட்டுள்ளது.

யமஹா ஆர்15 வெர்ஷன் 4 விலை

மெட்டாலிக் ரெட் – ரூ.1,82,439

டார்க் நைட் – ரூ.1,83,439

ரேசிங் ப்ளூ – ரூ. 1,87,439

ஆர்15 எம் விலை ரூ.1,95,439

(அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு).

Tags: Yamaha R15MYamaha YZF-R15 V4.0
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan