Automobile Tamilan

இந்தியா வரவிருக்கும் யமஹா ஆர்3, எம்டி-03 பைக் அறிமுகம்

2023 yamaha r3

2023 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் வெளியிடப்பட உள்ள யமஹா R3 மற்றும் MT03 பைக்குகள் இன்றைக்கு சென்னையில் உள்ள மெட்ராஸ் சர்க்யூட்டில் நடைபெற்ற டிராக் தின கொண்டாட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.

குறிப்பாக இரண்டு பெர்ஃபாமென்ஸ் ரக பைக்குகளும் இளைய தலைமுறையினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உள்ளது. இரண்டிலும் 321cc பேரலல் ட்வீன் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

Yamaha YZF-R3

R3 பைக்கில் உள்ள 321cc பேரலல் ட்வின் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் அதிகபட்ச பவர் 40.4 bhp ஆனது 10.750 rpm-லும் , மற்றும் 9.000 rpm-ல் 29.4 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

ஆர்3 பெர்ஃபாமென்ஸ் ரக ஃபேரிங் ஸ்டைல் பெற்ற 298 மிமீ  டிஸ்க் பிரேக் மற்றும் 220 மிமீ பின்புற டிஸ்க் பிரேக் உடன் முன்புறத்தில் 37 மிமீ இன்வெர்டேட் ஃபோர்க் மற்றும்  அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வகையில் மோனோஷாக் அப்சார்பர் பின்புறத்தில் வழங்கப்பட்டு, டூயல்-சேனல் ஏபிஎஸ் பெற்றதாக விளங்கும்.

14 லிட்டர் கொள்ளளவு பெற்ற பெட்ரோல் டேங்க் கொண்டு ஆர்3 பைக்கின் மொத்த எடை 169 கிலோ மட்டுமே ஆகும்.

மேலும், இந்த என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்ற நேக்டூ ஸ்டைல் பெற்றதாக விளங்கும் MT-03 மாடலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு பைக்குகளும் தற்பொழுது டீலர்கள் மூலம் முன்பதிவு நடைபெற்று வருகின்றது.

இந்திய சந்தையில் பாகங்களை தருவித்து ஒருங்கிணைக்கப்பட வாய்ப்புகள் உள்ளதால், விலை மிகவும் சவாலாக இருக்கும் பட்சத்தில் மிக சிறப்பான வரவேற்பினை இரண்டு மாடல்களும் பெற வாய்ப்புள்ளது.

Exit mobile version