Automobile Tamilan

2024 ஜனவரியில் விற்பனைக்கு வந்த பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள்

2024 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் கவாஸாகி ZX-6R முதல் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R வரை பல்வேறு மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாடல்களின் பட்டியலை தொகுத்து அறிந்து கொள்ளலாம்.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் ஏதெர் 450 அபெக்ஸ், 2024 பஜாஜ் சேட்டக், ரிவோல்ட் RV400 BRZ உட்பட புதிய நிறங்களை யமஹா R15 V4, FZ சீரிஸ், FZ-X, ஹஸ்குவர்ணா ஸ்வார்ட்பிளேன், ஜாவா 350, ஷாட்கன் 650, ஹோண்டா NX500, கவாஸாகி எலிமினேட்டர் என பல மாடல்கள் வந்துள்ளன.

கவாஸாகி நின்ஜா ZX-6R

கவாஸாகி வெளியிட்டுள்ள புதிய நின்ஜா ZX-6R பைக்கில் 636cc இன்லைன் நான்கு சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு 129bhp மற்றும் 69Nm டார்க் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பெற்றதாக விலை ரூ.11.09 லட்சத்தில் துவங்குகின்றது.

கவாஸாகி எலிமினேட்டர் 450

நியோ ரெட்ரோ மாடர்ன் க்ரூஸர் ஸ்டைலை பெற்றதாக ரூ.5.62 லட்சத்தில் வெளியான கவாஸாகி எலிமினேட்டர் 450 மோட்டார்சைக்கிள் மாடலில் 451cc லிக்யூடு கூல்டு பேரலல் ட்வீன் என்ஜின் பொருத்தப்பட்டு 9,000 rpmல் 45 bhp பவர் மற்றும் 6,000rpm 42.6 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் ஆனது இடம்பெற்றுள்ளது.

ஜாவா 350

கிளாசிக் 350 பைக்கிற்கு கடும் சவாலினை ஏற்படுத்தும் வகையில் முற்றிலும் மேம்பட்ட புதிய சேஸ் என பல்வேறு மாற்றங்களை கொண்டுள்ள ஜாவா 350 பைக்கில் முந்தைய என்ஜினுக்கு பதில் 334சிசி லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

34cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 22.5 hp பவர் மற்றும் 28.1 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது. ஜாவா 350 பைக்கின் விலை ரூ.2.15 லட்சத்தில் துவங்குகின்றது.

ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650

கஸ்டமைஸ் செய்யப்படும் பைக்குகளுக்கு இணையான ஸ்டைலிங் பெற்ற பாபர் ரக ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 மாடலில்  648cc பேரல் ட்வின் எஞ்சின் அதிகபட்சமாக 47 Hp பவரை 7100 RPM-ல் வழங்குவதுடன்,  4000 RPMல் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 விலை ரூ.3.59 லட்சம் முதல் துவங்கி ரூ.3.73 லட்சம் வரை கிடைக்கின்றது

2024 ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350

புதிதாக டேப்பர் ஆரஞ்ச் மற்றும் க்ரீன் என இரு நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ள ரோட்ஸ்டெர் ஸ்டைல் ஹண்டர் 350 பைக்கின் விலை ரூ.1.49 லட்சத்தில் துவங்கி ரூ.1.75 லட்சம் வரை கிடைக்கின்றது.

ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 மாடலில் 6,100 rpmல் 20.2 bhp பவருடன்  27 Nm டார்க் ஆனது 4,000 rpmல் வழங்குகின்றது. இந்த மாடலில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

2024 யமஹா R15 V4 & யமஹா FZ சீரிஸ்

யமஹா நிறுவனம் 2024 ஆம் ஆண்டை முன்னிட்டு யமஹா R15 V4 பைக்கில் கூடுதலாக ஒரு நிறமும், மற்ற யமஹா FZ சீரிஸ் பைக்கிலும் கூடுதலாக சில நிறங்கள் கிடைக்கின்றது.

ஹோண்டா NX500

ஹோண்டா NX500 பைக் மாடலில் தொடர்ந்து 471cc பேரலல் ட்வின் சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 47.5 hp பவர் மற்றும் 43.2 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. முந்தைய என்ஜினை விட புதிய மாடலில் கிராங்க் கவுண்டர்வெயிட் மற்றும் பேலன்ஸ் ஷாஃப்ட்டை  மேம்படுத்தியுள்ளது.

ஹோண்டா NX500 பைக்கின் விலை ரூ.5.90 லட்சத்தில் கிடைக்கின்றது.

2024 ஹஸ்குவர்னா ஸ்வார்ட்பிளேன் 401 

நவீனத்துவமா வடிவமைப்பினை பெற்ற ரெட்ரோ ஸ்டைல் ஹஸ்குவர்ணா ஸ்விர்ட்பிளேன் 401 பைக்கில் புதிய 398.6cc சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 46 bhp பவர் மற்றும் 39 Nm டார்க் வழங்குகின்றது. கூடுதலாக ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் உடன் இணைந்த 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஹஸ்குவர்னா ஸ்வார்ட்பிளேன் 401 பைக் விற்பனைக்கு ரூ.2.92 லட்சம் ஆகும்.

2024 ஹஸ்குவர்னா விட்பிளேன் 250

ஹஸ்குவர்னா விட்பிளேன் 250 பைக் விலை ரூ.2.19 லட்சம் ஆகவும், கேடிஎம் 250 டியூக் பைக்கில் இருந்து பெறப்பட்ட 249.5cc லிக்யூடு கூல்டு, சிங்கிள் சிலிண்டர் பெறப்பட்ட என்ஜின் அதிகபட்சமாக 30.47 bhp மற்றும் 25 Nm டார்க் வழங்குகின்றது. இதில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

ஏதெர் 450 அபெக்ஸ்

ஏதெரின் மிக வேகமான ஸ்கூட்டராக வெளியிடப்பட்டுள்ள 450 அபெக்ஸ் 450 அபெக்ஸ் 3.7 kWh பேட்டரி ஆனது PMSM மோட்டார் மூலம்  அதிகபட்சமாக 7.0kW (9.38hp) பவர் மற்றும் 26Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. 0-40 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 2.9 வினாடி தேவைப்படும்.

ஏதெர் 450 அபெக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.1.89 லட்சம் ஆகும்.

 2024 பஜாஜ் சேட்டக்

சேட்டக் ஸ்கூட்டரில் இணைந்துள்ள 2024 ஆம் ஆண்டிற்கான மாடலின் விலை ரூ.1.15 லட்சம் முதல் ரூ. 1.45 லட்சம் வரை கிடைக்கின்றது.  பிரீமியம் வேரியண்ட் 3.2 KWh பேட்டரி பெற்று ரேஞ்ச் 127 கிமீ என உறுதிப்படுத்தப்பட்டு, அதிகபட்ச வேகம் மணிக்கு 73 கிமீ ஆகும். இந்த மாடலில் தொடுதிரை இல்லாத 5 அங்குல TFT கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு கூடுதலாக டெக்பேக் கனெக்ட்டிவிட்டி ஆப்ஷனலாக வழங்கப்படுகின்றது.

ரிவோல்ட் RV400 BRZ

ரிவோல்ட் RV400 எலக்ட்ரிக் பைக்கின் டிசைனை பெற்று குறைந்த விலையில் வெளிவந்துள்ள RV400 BRZ விலை ரூ.1.38 லட்சத்தில் கிடைக்கின்றது.  3.24 kWh பேட்டரி பேக்கை 3 kW பவர் வழங்கும் மிட் டிரைவ் மோட்டார் மூலம் இயக்கப்படும் RV400 BRZ மோட்டார்சைக்கிள் முழுமையாக சார்ஜ் செய்ய 4.5 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். முழு சார்ஜ் செய்தால் ஈக்கோ மோடில் 150 கிமீ வரை செல்லும், இந்த பைக்கின் அதிகபட்ச வேக மணிக்கு 85 கிமீ ஆக உள்ளது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R

ஹீரோ மேவ்ரிக் 440 உட்பட பல்வேறு மாடல்களை வெளியிட்டுள்ள ஹீரோ மோட்டோகார்ப் 125சிசி சந்தையில் எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கினை ரூ.95,000 -ரூ.99,500 விலையில் வெளியிட்டுள்ளது.  எக்ஸ்ட்ரீம் 1Import Demo & Style25R மாடலில் 124.7cc ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் என்ஜின் அதிகபட்சமாக 8,250 rpm-ல் 11.40 hp பவர் மற்றும் 6,500rpm-ல் 10.5 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

 

2024 ராயல் என்ஃபீல்டு புல்லட் 350

புல்லட் 350 பைக்கில் கூடுதலாக இரண்டு சில்வர் நிற பின் ஸ்டிரிப் பெற்ற மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலின் ஆரம்ப நிலை மிலிட்டரி ரெட், பிளாக் விலை ரூ.1,74 லட்சம் முதல் டாப் வேரியண்ட் விலை ரூ. 2.16 லட்சம் வரை கிடைக்கின்றது.

Exit mobile version