இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற எலகட்ரிக் பைக்குகளில் ஒன்றான ரிவோல்ட் RV400 BRZ என்ற பெயரில் குறைந்த விலை கொண்ட மாடல் விற்பனைக்கு ரூ.1.38 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சந்தையில் கிடைக்கின்ற ஓபென் ரோர், டார்க் க்ரோட்ஸ் போன்ற மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் அமைந்துள்ள ஆர்வி400 பிஆர்இசட் பைக்கின் நுட்பவிபரங்கள் அனைத்தும் விற்பனையில் உள்ள ரிவோல்ட் ஆர்வி400 போலவே அமைந்திருந்தாலும் ஆப் கனெக்ட்டிவிட்டி வசதிகள் இல்லாமல் RV400 BRZ வந்துள்ளது.
3.24 kWh பேட்டரி பேக்கை 3 kW பவர் வழங்கும் மிட் டிரைவ் மோட்டார் மூலம் இயக்கப்படும் RV400 BRZ மோட்டார்சைக்கிள் முழுமையாக சார்ஜ் செய்ய 4.5 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். முழு சார்ஜ் செய்தால் ஈக்கோ மோடில் 150 கிமீ வரை செல்லும் என்று ரிவோல்ட் குறிப்பிடுகின்றது. மேலும் இந்த பைக்கின் அதிகபட்ச வேக மணிக்கு 85 கிமீ ஆக உள்ளது.
இரு பக்க டயர்களிலும் பொதுவாக 240mm டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு, சிறப்பான பாதுகாப்பினை மேம்படுத்த கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பெற்று முன்புறத்தில் யூஎஸ்டி ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் கொண்டதாக வந்துள்ளது.
RV400 BRZ மாடல் சிறப்பான ஸ்போர்ட்டிவ் நேக்டு ஸ்டீரிட் பைக் தோற்ற அமைப்பினை கொண்டுள்ள நிலையில் எலக்ட்ரிக் பைக்கிற்கு 5 ஆண்டுகள் அல்லது 75,000 கிலோமீட்டர் வாரண்டி, பேட்டரி உத்தரவாதம் 5 ஆண்டுகள் அல்லது 75,000 கிலோமீட்டர் வரை கிடைக்கின்றது.
Revolt RV400 BRZ – ₹ 1.38 லட்சம்
Revolt RV400 – ₹ 1.55 லட்சம்