2024 yamaha r15

2024 ஆம் ஆண்டிற்கான ஃபேரிங் ஸ்டைல் பெற்ற ஸ்போர்ட்டிவ் யமஹா R15 V4 பைக்கில் கூடுதலாக புதிய நிறங்கள் சேர்க்கப்பட்டு தொடர்ந்து 155cc என்ஜின் கொண்ட மாடலின் சிறப்பம்சங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன் ரோடு விலை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

ஏரோடைனமிக்ஸ் டிசைன் பெற்றுள்ளதால் ஆர்15 வி4 மிக அதிகப்படியான வேகம் மற்றும் நிலைப்பு தன்மை பெற்றிருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

2024 Yamaha R15 V4

புதிய நிங்களாக வந்துள்ள விவிட் மெஜந்தா மெட்டாலிக், ரேசிங் ப்ளூ, மெட்டாலிக் ரெட், இன்டன்சிட்டி வெள்ளை மற்றும் டார்க் நைட் என மொத்தமாக 5 நிறங்களை பெற்றுள்ளது. ஸ்போர்ட்டிவ் ஆர்15 வி4 பைக்கில் டூயல் ஹார்ன், இரண்டு பயன்படாடுகளுக்கு ஏற்ற எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி பொசிஷன் லைட், எல்இடி இன்டிகேட்டர் மற்றும் எல்இடி டெயில் லைட்  பெற்றுள்ளது.

r15 v4

R15 V4 பைக்கில் இடம்பெற்றுள்ள LC4V 155cc, லிக்யூடு கூல்டு SOHC நான்கு வால்வு, சிங்கிள் சிலிண்டர் VVA பெற்ற என்ஜின் 10000rpm-ல் 18.1 bhp பவர் மற்றும் 7,500rpm-ல் 14.2Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் சிலிப்பர் அசிஸ்ட் உடன் கூடிய 6 வேக கியர்பாக்ஸ் உடன் டிராக் மற்றும் ஸ்டீரிட் என இரு ரைடிங் மோடு உள்ளது.

மிக இலகுவாக கிளட்ச் உதவி இல்லாமல் அப்சைடு கியர் ஷிஃப்ட் செய்ய க்விக் ஷிஃப்டர் அனுமதிக்கின்றத இந்த வசதி இரு நிறங்களில் (ரேசிங் ப்ளூ, மெட்டாலிக் ரெட்) மட்டும் ஆக்செரீஸ் ஆக பெறுகின்றது.

யமஹா ஆர்15 வி4 பைக்கில் இழுவைக் கட்டுப்பாட்டு அமைப்பு (Traction Control System- TCS) ஆனது FZ-X பைக்கிலும் இடம்பெற்றுள்ளது.  ஒரு பிரத்யேக மின்னணு அமைப்பின் மூலம் சாலைகளில் உள்ள மாறுபட்ட தன்மையால் ஏற்படுகின்ற வீல் ஸ்பீன் மூலம் பைக் நிலை தடுமாறுவது அல்லது கீழே விழுவதனை தடுக்கும் வகையில் மின்னனு அமைப்பின் உதவியுடன் சக்கரங்களுக்கு கூடுதல் பவரை வழங்கி கட்டுப்படுத்துகின்றது.

2024 yamaha r15 v4

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் லிக்டூ வகை மோனோஷாக் அப்சார்பர் பெற்று 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட யமஹா R15 V4 பைக்கில் 11 லிட்டர் பெட்ரோல் டேங்க் பெற்று மொத்த எடை 141 கிலோ ஆகும். R15 V4 பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 42-45KMPL வரை கிடைக்கின்றது.

முன்பக்கம் 100/80-17M/C 52P டயர் கொண்டு 282 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 140/70R17M/C 66H ரேடியல் டயருடன் 220 மிமீ டிஸ்க் உடன் யமஹா R15 V4 பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது. சைடு ஸ்டாண்ட் கட் ஆஃப் சுவிட்ச், முழுமையான டிஜிட்டல் கிளஸ்ட்டரில் Y-Connect மூலம் அழைப்பு, எஸ்எம்எஸ், மின்னஞ்சல் எச்சரிக்கை, போன் பேட்டரி இருப்பு ஆகியவற்றுடன் கடைசியாக பார்க்கிங் செய்த இடம், என்ஜின் தொர்பான கோளாறுகளுக்கான அலர்ட், பராமரிப்பு தொடர்பான அறிவிக்கை, எரிபொருள் சிக்கனம், மற்றும் ரெவஸ் டேஸ்போர்ட் என பல்வேறு கனெக்ட்டிவிட்டி அம்சங்களை பெற்றுள்ளது.

r15 v4 white

2024 Yamaha R15 V4 on road Price in Tamil Nadu

ரூ. 1.83,539 முதல் ரூ.1,88,539 வரை எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கின்ற யமஹா R15 V4 பைக்கிற்கு போட்டியாளர்களாக ஹீரோ கரீஸ்மா XMR, கேடிஎம் ஆர்சி200, பல்சர் RS200 உள்ளது.

2024 Yamaha R15 V4 ஆன் ரோடு விலை பட்டியல்

  • R15 METALLIC RED – ₹ 2,25,890
  • R15 DARK KNIGHT – ₹ 2,26,987
  • R15 Vivid Magenta Metallic, Racing Blue, INTENSITY WHITE – ₹ 2,32,456

(on-road price Tamil Nadu)

கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஆன் ரோடு விலை கூடுதல் ஆக்சசெரீஸ் சேர்க்கப்பட்டால் மாறக்கூடும் என்பதனை அறிந்து கொள்ளுங்கள்.

யமஹா ஆர்15 வி4 புகைப்படங்கள்