புதிய 451cc என்ஜின் பெற்ற கவாஸாகி எலிமினேட்டர் 450 பைக் மாடல் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய எலிமினேட்டர் இந்தியா வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பாக ஜப்பான் சந்தையில் எலிமினேட்டர் 400 பைக் அறிமுகம் செய்யபட்டதை அடிப்படையாக கொண்ட 451cc என்ஜின் பொருத்தப்பட்ட மாடல் தான் அறிமுகமாகியுள்ளது.
Kawasaki Eliminator 450
நிஞ்ஜா 400 மற்றும் எலிமினேட்டர் 400 பைக்குகளில் இடம்பெறுள்ள என்ஜின் 451cc லிக்யூடு கூல்டு பேரலல் ட்வீன் என்ஜின் ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தோராயமாக 49bhp பவர் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் ஆனது இடம்பெற்றுள்ளது.
நியோ ரெட்ரோ வடிவமைப்பினை கொண்ட க்ரூஸர் ரக பைக்கில் ஸ்டீல் டெர்லிஸ் சேஸ் கொண்டு தயாரிக்கப்பட்டு முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டு முன்பக்கத்தில் 18 அங்குல வீல் மற்றும் பின்பக்கத்தில் 16 அங்குல வீல் உள்ளது.
எலிமினேட்டர் 450 பைக்கில் இரண்டு வேரியண்டுகள் உள்ளன. STD மற்றும் SE என இரண்டும் ஒரே மாதிரியான அம்சங்களை பெற்றாலும், SE வேரியண்ட் டூயல் டோன் பெயிண்ட், ஃபோர்க் கெய்ட்டர்கள், USB டைப் C சார்ஜர் மற்றும் சிறிய ஃப்ளைஸ்கிரீன் ஆகியவற்றை கொண்டுள்ளது.
இந்தியாவில் புதிய கவாஸாகி எலிமினேட்டர் 450 பைக் 2024 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படலாம்.