இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய 2024 ஆம் ஆண்டிற்கான கவாஸாகி Z H2 மற்றும் Z H2 SE பைக்குகள் மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் தன்மையை வெளிப்படுத்தக்கூடிய 998cc சூப்பர் சார்ஜ்டு என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு மோட்டார் சைக்கிள்களும் ஒரே மாதிரியான தோற்ற வடிவமைப்பைக் கொண்டு, முன்பக்கத்தில் முரட்டுத்தனமான ஹெட்லைட், பெரிய எரிபொருள் தொட்டி, பிளவு இருக்கைகள், பக்கவாட்டு எக்ஸ்ஹாஸ்ட் மற்றும் இருபுறமும் 17 இன்ச் அலாய் வீல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
2024 Kawasaki Z H2 & Z H2 SE
Z H2 மற்றும் Z H2 SE என்பது 998cc சூப்பர்சார்ஜ்டு செய்யப்பட்ட இன்லைன்-4 சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 197.2 BHP பவரை 11,000 rpm மற்றும் 137 Nm டார்க் ஆனது 8,500 rpm. இந்த இன்ஜினில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் USD ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோ-ஷாக் பொருத்தப்பட்டுள்ளது. SE பதிப்பு ஷோவா ஸ்கைஹூக் தொழில்நுட்பத்தைப் பெற்றதாக வந்துள்ளது.
இசட் எச்2 ஒற்றை மெட்டாலிக் கார்பன் கிரேயில் கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது, அதே சமயம் இசட் எச்2 எஸ்இ கருப்பு நிறத்துடன் மெட்டாலிக் மேட் கிராபெனெஸ்டீல் கிரேயைப் பெறுகிறது.
2024 Kawasaki Z H2 ₹ 23.48 லட்சம்
2024 Kawasaki Z H2 SE – ₹ 27.76 லட்சம்