சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கேடிஎம் நிறுவனத்தின் புதிய 390 டியூக் 2024 ஆம் ஆண்டு மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய மாடலின் முக்கிய சிறப்பம்சங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.
முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்பட்ட டிசைன் அம்சம், புதுப்பிக்கப்பட்ட என்ஜின், அதிகப்படியான பவர் ஆகியவற்றுடன் புதிய ஸ்டீல் டெர்லிஸ் ஃபிரேம் பெற்றதாக வந்துள்ளது.
2024 KTM 390 Duke
முதலில் கேடிஎம் 390 டியூக் மாடலில் என்ஜின் முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட 398.7cc LC4c என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. முந்தைய 373cc பவர் 43.5bhp மற்றும் 37Nm என்ஜினுக்கு பதிலாக புதிய என்ஜின் வந்துள்ளது. LC4c 398.7cc, லிக்யூடு கூல்டு என்ஜின் பெற்று, ஒற்றை சிலிண்டர் யூரோ 5.2 மாசு உமிழ்வுக்கு ஏற்றதாக அமைந்துள்ளது. தற்பொழுது அதிகபட்சமாக 8,500rpm-ல் பவர் 44.2bhp மற்றும் 6,500rpm-ல் 39Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு சிலிப்பர் உடன் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.
புதிய என்ஜின் மூலம், பவர் மற்றும் டார்க் புள்ளிவிவரங்கள் 1.36 bhp மற்றும் 2Nm அதிகரித்துள்ளது. மேலும், புதிய பைக்கில் சிலிண்டர் ஹெட் மற்றும் கியர்பாக்ஸ் மற்றும் சிறந்த முறையில் காற்றினை பெற பெரிய ஏர்பாக்ஸ் உள்ளது. தற்போதைய டியூக்கில் உள்ள யூனிட்டை விட புதிய என்ஜின் எடை குறைவானதாக இருக்கும் என்றும் கேடிஎம் கூறுகிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யபட்ட பஜாஜ்-டிரையம்ப் ஸ்பீடு 400 என்ஜினை போலவே டிஸ்பிளேஸ்மென்ட் உள்ளது.
390 டியூக் முற்றிலும் புதிய 5-இன்ச் வண்ண TFT டிஜிட்டல் கிளஸ்ட்டரைப் பெறுகிறது. இது மூன்று ரைடிங் மோடுகளைப் பெறுகிறது – ரெயின், ஸ்டீரிட் மற்றும் ட்ராக் – மேலும் ஒவ்வொரு பயன்முறையும் படிப்படியாக பவர் டெலிவரியை வேறுப்படுத்துகின்றது. புதிய 390 டியூக் பேக்குகளில் உள்ள ஒரு நேர்த்தியான லாஞ்ச் கன்ட்ரோல் உள்ளது இதனை ட்ராக் மோடில் மட்டுமே அணுக முடியும்.
பவுடர்-கோடட் ஸ்டீல் ட்ரெல்லிஸ் ஃப்ரேமுடன் இணைந்து 43 மிமீ அட்ஜெஸ்டபிள் அப் சைடு டவுன் ஃபோர்க் ரீபௌண்ட் மற்றும் கம்ப்ரஷன் அட்ஜஸ்ட்டபிலிட்டியுடன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. பிரேக்கிங் அமைப்பில் 240mm பின்புற டிஸ்க் மற்றும் டூயல்-சேனல், கார்னரிங் மற்றும் சூப்பர்மோட்டோ ஏபிஎஸ் உடன் புதிய 320mm முன்புற டிஸ்க் உள்ளது. மிச்செலின் டயர்களில் சுற்றப்பட்ட 17 அங்குல அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளன.
2024 KTM 250 Duke
கேடிஎம் 250 டியூக் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 249சிசி என்ஜின் அதிகபட்சமாக 31PS பவரை 9250rpm-ல் மற்றும் 25Nm @ 7250rpm-ல் வெளிப்படுத்துகின்றது.
2024 KTM DUKE Price list
2024 KTM 390 Duke ₹ 3,10,520
2024 KTM 250 Duke ₹ 2,39,000
(All price ex-showroom)
KTM இணையதளம் அல்லது நாடு முழுவதும் உள்ள கேடிஎம் ஷோரூம் வாயிலாக முன்பதிவு துவங்கப்பட்டு, கட்டணமாக ரூ.4,499 வசூலிக்கப்படுகின்றது.