ஓலா எலக்ட்ரிக் வெளியிட்டுள்ள 2024 ஓலா S1X எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வரிசையில் மூன்று விதமான பேட்டரி ஆப்ஷன்களுடன் வந்துள்ளது. ஆரம்ப நிலையில் உள்ள 2kwh வேரியண்ட் ரூ.69,999, 3kwh வேரியண்ட் ரூ.84,999 மற்றும் 4kwh வேரியண்ட் விலை ரூ.99,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடுக்கும் நோக்கில் விலை குறைத்து வெளியிடப்பட்டுள்ள ஓலா S1X, S1 Air மற்றும் S1 Pro விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 190 கிமீ ரேன்ஜ் வழங்குகின்ற ஓலா S1X 4kwh மாடல் விலை ரூ.99,999 ஆக மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் பெற்ற ஓலா S1X இ-ஸ்கூட்டரின் பேட்டரி வகைகள் பின் வருமாறு;-
ஓலா S1X ஸ்கூட்டரில் க்ரூஸ் கண்ட்ரோல், ரிவர்ஸ் மோடு, ஆப் ஆதரவுடன் கூடிய கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் 34 லிட்டர் கொள்ளளவு ஸ்டோரேஜ் வசதியுடன் அமைந்துள்ள ஸ்கூட்டர் டெலிவரி அடுத்த வாரம் முதல் துவங்க உள்ளது.
ஓலாவின் அனைத்து இ-ஸ்கூட்டர்களுக்கும் 8 வருட வாரண்டியுடன் மற்றும் 80,000 கிமீ வரை கிடைக்கும்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…
கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…
துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…