Automobile Tamilan

டிசம்பர் 20ல் பஜாஜ் சேட்டக் 2025 விற்பனைக்கு அறிமுகமாகிறது

bajaj chetak blue 3202

தற்பொழுது 96 ஆயிரம் ஆரம்ப விலையில் கிடைக்கின்ற பஜாஜ் ஆட்டோவின் சேட்டக் எலெக்டரிக் ஸ்கூட்டரின் புதிய தலைமுறை மாடல் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி சற்று கூடுதலான மாற்றங்கள் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.

குறிப்பாக அதிக பூட்ஸ்பேஸ் சில வசதிகளில் மேம்பாடு மற்றும் ரேஞ்சு உள்ளிட்டவற்றில் மாறுதல்கள் அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மற்றபடி, தற்பொழுதுள்ள டிசைனில் எந்த மாற்றமும் இருக்காது.

சேட்டக் ஸ்கூட்டரில் தற்பொழுது சேட்டக் 2901, சேட்டக் அர்பேன், சேட்டக் பிரீமியம், மற்றும் 3201 SE என நான்கு விதமான வகைகள் கிடைக்கின்ற நிலையில் சேட்டக் 2901 மாடல் அதிகபட்சமாக 123 கிமீ ரேஞ்ச் வழங்கும் 2.88kwh லித்தியம் அயன் பேட்டரி உள்ளது.

அர்பேன் இ-ஸ்கூட்டரில் 2.9Kwh லித்தியம் பேட்டரி பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 113 கிமீ ரேஞ்ச் வழங்கும் என சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இறுதியாக, 73 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறனுடன் 4 மணி நேரம் 30 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஏறும் திறனை இதன் 3.2kwh லித்தியம் அயன் பேட்டரி கொண்டிருக்கின்ற சேட்டக் பிரீமியம் மாடல் 126 கிமீ பயணிக்கும் தொலைவினை கொண்டுள்ளது.

Exit mobile version