இந்தியாவில் பிஎம்டபிள்யூ மற்றும் டிவிஎஸ் கூட்டணியில் தயாரிக்கப்பட்ட G 310 RR ஃபேரிங் ஸ்டைலின் மேம்பட்ட மாடலை அடுத்த சில நாட்களுக்குள் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. வெளியிடப்பட்டுள்ள டீசரில் பின்புற டெயில் பகுதி மட்டும் உள்ளது.
என்னென்ன மாற்றங்கள் வரலாம்.?
சமீபத்தில் இதன் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 மேம்படுத்தபட்ட வசதிகளை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில், பிஎம்டபிள்யூ மாடலும் மேம்படுத்தப்பட உள்ளது.
புதிதாக வரவிருக்கும் ஜி 310 ஆர்ஆர் பைக்கில் OBD-2B விதிமுறைகளுக்கு உட்பட்டு ரிவர்ஸ் இன்கிளைன்டு DOHC 313சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் 9,800 rpm-ல் 38 PS பவர் மற்றும் 7,900 rpm-ல் 29 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் ஸ்லிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பெற உள்ளது.
மற்றபடி, மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் சிறிய மேம்பாடுகளை பெற்று டிசைனில் ஏரோடைனமிக்ஸ் விங்க்லெட்ஸ், Track, Sport, Urban, மற்றும் Rain என நான்கு விதமான ரைடிங் மோடுகளுடன் புதிய சிக்யூன்சியல் டர்ன் இன்டிகேட்டர், 8 ஸ்போக் கொண்ட அலாய் வீல் உடன் வரக்கூடும்.
தற்பொழுது சந்தையில் உள்ள ஜி 310 ஆர்ஆர் புதிய வரி ஜிஎஸ்டி 2.0 நடைமுறைக்கு வரவுள்ளதால் ரூ.2.88 லட்சம் ஆக குறைய உள்ளது. எனவே, கூடுதல் வசதி பெற்றதாக வரவுள்ள மாடல் சற்று விலை அதிகமாக இருக்கலாம்.