இந்தியாவில் ஹோண்டா பிங்விங்க் மூலம் வெளியிடப்பட்டுள்ள புதிய CB650R மற்றும் CBR650R என இரண்டிலும் இ-கிளட்ச் நுட்பத்துடன் விலை முறையை ரூ.9.60 லட்சம் மற்றும் ரூ.10.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த இரு மாடலிலும் 649cc இன்லைன் 4 சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு 12,000 rpm-ல் 94 hp பவர், 9,500 rpm-ல் 63 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் இ கிளட்ச் நுட்பத்துடன் 6 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
Honda E-Clutch என்றால் என்ன ?
மோட்டார் மற்றும் சென்சார் உதவியுடன் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இ-கிளட்ச் நுட்பம் மூலமாக கிளட்ச் லிவரை பயன்படுத்தாமலே வழக்கமான மேனுவல் கியர்பாக்ஸை போலவே கியர் மாற்றிக் கொள்ளலாம்.
இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் பயணிக்கும் பொழுது மற்றும் சக்திவாய்ந்த பைக்குகளை இயக்கும் புதிய ரைடர்கள் இலகுவாக கியரை மாற்றிக் கொள்ளலாம்.
சிபிஆர் 650ஆர், சிபி 650ஆர் என இரண்டிலும் 41 மிமீ ஷோவா ஃபோர்க்ஸ் (SFF-BP) மற்றும் பின்புறத்தில் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் சஸ்பென்ஷனை கொண்டுள்ளது.
முன்பக்கத்தில் டூயல் 310 மிமீ ரேடியல்-மவுண்டட் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பெற்று டூயல் சேனல் ABS பெற்றதாக வந்துள்ளது.
5.0-இன்ச் முழு-வண்ண TFT திரை புளூடூத் இணைப்பு மற்றும் ஹோண்டாவின் RoadSync ஆப் மூலம் ஸ்மார்ட்போன் செயல்பாடுகளுக்கான அணுகலை வழங்குகின்றது.