கவாஸாகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தோனேசியா சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டிற்கான W175 பைக்கில் SE, SE பிளாக் ஸ்டைல், கஃபே மற்றும் TR என நான்கு விதமான வகைகளில் கிடைக்கின்றது.
என்ஜின் பவர் மற்றும் மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் எந்த மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது. W175 பைக்கில் உள்ள 177cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் 7,500 rpm-ல் 13hp பவர் மற்றும் 6,000 rpm-ல் 13.2Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
இரு பக்க டயரிலும் 17 அங்குல வீல் பெற்று முன்புறத்தில் 220மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 110 மிமீ டிரம் பிரேக் பெற்றதாகவும், டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பரை கொண்டுள்ளது.
126 கிலோ எடையை கொண்டுள்ள டபிள்யூ175 பைக்கின் கிரவுண்ட் கிளியரண்ஸ் 165 மிமீ மற்றும் இருக்கை உயரம் 780 மிமீ ஆகும்.
‘W175 SE’ ஸ்டிக்கரிங் பெற்று ஒற்றை இருக்கை அமைப்பில் மிக மாறுபட்ட ஸ்டைல் W லோகோ கொண்டு இரு விதமான நிறங்களை பெற்றதாக அமைந்துள்ளது. அடுத்து கூடுதலாக எஸ்இ வேரியண்டில் பிளாக் ஸ்டைல் பெற்றுள்ளதால் W175 SE Black Style ஸ்டிக்கரிங் உள்ளது.
கஃபே ரேசர் பைக்குகளுக்கு உரித்தான ஸ்டைலை பெற்றுள்ள டபிள்யூ175 கஃபே மாடலுக்கு ஹெட்லைட்டின் மேற்பகுதியில் சிறிய வைசர், கிரே மற்றும் வெள்ளை என இரு நிற வண்ண கலவையை பெற்றுள்ள மாடலின் டேங்கில் W லோகோ கொடுக்கப்பட்டுள்ளது.
டாப் வேரியண்டாக உள்ள W175TR வேரியண்டில் ஒற்றை கருப்பு நிறத்தை பெற்று ஸ்கிராம்பளர் ஸ்டைலுக்கு இணையான தோற்றத்தை கொண்டு மேல் நோக்கிய கைப்பிடி உள்ள மாடலின் பெட்ரோல் டேங்கில் TR லோகோ சிவப்பு நிறத்துக்கு சில இடங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டும், முன்புற ஃபென்டர் குறைவான நீளத்தை பெற்றுள்ளது.
இந்திய சந்தையில் கவாஸாகி டபிள்யூ175 பைக்கில் ஸ்டீரிட் மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனை செய்யப்படும் நிலையில், இந்த புதிய மாடல்களும் இந்திய சந்தைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.