Automobile Tamilan

2025 கேடிஎம் 390 அட்வென்ச்சர் பற்றி விற்பனைக்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை.!

2025 ktm 390 adventure r

இந்தியாவில் வரும் ஜனவரி 30 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள கேடிஎம் 390 அட்வென்ச்சரில் பல்வேறு மேம்பாடுகளை கொண்டிருப்பதுடன் சக்திவாய்ந்த 46bhp பவரை வெளிப்படுத்துகின்ற 399சிசி எஞ்சின் பொருத்தபட்டுள்ளது. அட்வென்ச்சர் மட்டுமல்லாமல் என்டூரா 390 R மாடலும் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

2025 KTM 390 Adventure R

முதன்முறையாக EICMA 2024 அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டு இந்திய சந்தையில் இந்தியா பைக் வீக் அரங்கிலும் காட்சிப்படுத்தப்பட்ட 390 அட்வென்ச்சர் பைக்கில் புதிய  399cc, ஒற்றை சிலிண்டர் லிக்யூடூ கூல்டு எஞ்சின் ஆனது 390 டியூக் பைக்கிலிருந்து பெறப்பட்டு 46 bhp மற்றும் 39 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் இடம்பெற்றிருக்கும்.

பெரிய கேடிஎம் அட்வென்ச்சர் பைக்குகளில் இருந்து பெறப்பட்ட டிசைனை கொண்டுள்ள 390 அட்வென்ச்சரில் மிக நேர்த்தியான வட்ட வடிவத்தினை பெற்று செங்குத்தான அமைப்பிற்குள்ளான எல்இடி புராஜெக்டர் விளக்கினை கொண்டு, சற்று உயரமான விண்ட்ஸ்கீரின் கொண்டு ஒற்றை இருக்கை அமைப்புடன் மிக எளிமையாக அதிகப்படியான பேனல் இல்லாத வடிவமைப்பினை கொண்டு விளங்குகின்றது.

வயர்டூ ஸ்போக்டூ வீல் பெற்று முன்பக்கத்தில் அட்ஜெஸ்டபிள் அப்சைடு டவுன் ஃபோர்க்கு மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனை கொண்டு 21 அங்குல முன்புற டயரில் டிஸ்க் பிரேக், பின்புறத்தில் 17 அங்குல வீல் கொண்டு டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் கார்னரிங் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் ரைடிங் மோடுகளுடன் வரவுள்ளது.

அட்வென்ச்சர் 390 பைக்கில் 5 அங்குல TFT கிளஸ்ட்டருடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெற்றிருக்கும்.

இதுதவிர இந்திய சந்தையில் 390 Enduro R டூயல் ஸ்போர்ட், 390 SMC சூப்பர் மோட்டோ மாடலும் சந்தைக்கு வரக்கூடும், ஏறக்குறைய 390 அட்வென்ச்சரின் உதிரிபாகங்களை பயன்படுத்தினாலும், எளிமையான தோற்றத்துடன் விளங்குகின்றது. வரும் ஜன்வரி 30, 2025ல் விலை அறிவிக்கப்பட்ட உள்ளது.

Exit mobile version