Automobile Tamilan

கூடுதல் ரேஞ்சுடன் ₹ 1.66 லட்சத்தில் 2025 சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியானது.!

சிம்பிள் ஒன் எலக்ட்ரிக்

சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் 2025 ஆம் ஆண்டிற்கான மாடலின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.1.66 லட்சத்தில் துவங்கினாலும் முந்தைய மாடலை விட 36 கிமீ ரேஞ்ச் அதிகரிக்கப்பட்டு தற்பொழுது 248 கிமீ வெளிப்படுத்துகின்றது.

ஒன் இ-ஸ்கூட்டரில் 8.5 kW மின்சார மோட்டார் பொருத்தப்பட்டு அதிகபட்ச பவராக 11 bhp மற்றும் 72 Nm டார்க் வழங்குகின் 5 kWh லித்தியம் ஐயன் பேட்டரி பேக் கொண்ட மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 248 ரேஞ்சு வழங்கும் என IDC சான்றிதழ் பெற்றுள்ளது.

முன்பாக வெளியிடப்பட்ட அடிப்படை மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்கின்றது. 5Kwh ஒட்டுமொத்த பேட்டரி ஆனது 3.3kWh ஃபிக்ஸடு பேட்டரியாகவும் 1.5kWh பேட்டரி நீக்கும் வகையில் ஸ்வாப் நுட்பத்தை கொண்டதாக அமைந்துள்ளது. நீக்கும் வகையிலான பேட்டரி 7 கிலோ எடை கொண்டதாகும்.

ஈக்கோ, ரைடு, டாஷ் மற்றும் சோனிக் ஆகிய நான்கு ரைடிங் மோடுகளைக் கொண்டுள்ள ஸ்கூட்டரின்  அதிகபட்ச வேகம் 105km/h ஆகும். 90/90-12 அங்குல வீல் இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது.

2025 மாடலில் கூடுதல் வசதிகளாக புதிய அம்சங்களில் டயர் பிரஷர் மானிட்டர், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் மற்றும் யூ.எஸ்.பி சார்ஜிங் போர்ட் ஆகியவை பெற்றுள்ளது.

தற்பொழுது நாடு முழுவதும் 10 டீலர்களை மட்டும் பெற்றுள்ள சிம்பிள் எனர்ஜி நிறுவனம், 2025-2026 நிதியாண்டின் இறுதிக்குள் 100 டீலர்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

Exit mobile version