₹ 1.45 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ள சிம்பிள் எனெர்ஜி ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இந்தியாவின் மிக அதிகப்படியான ரேஞ்சு தரக்கூடிய மாடலாக விளங்கும் நிலையில் முக்கிய அம்சங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
2021 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சிம்பிள் ஒன் நிதி திரட்டுவதில் ஏற்பட்ட சிக்கலால் விற்பனைக்கு வெளியிடுவது தாமதமானது. இந்நிலையில் ஓசூர் அருகே உள்ள ஆலையில் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது.
Simple One escooter
ஏதெர் 450X, ஒலா S1 Pro, பஜாஜ் சேட்டக், ஹீரோ விடா V1 உள்ளிட்ட மாடல்களுடன் பல்வேறு பேட்டரி மின்சார ஸ்கூட்டர்களை எதிர்கொள்ள உள்ள சிம்பிள் ஒன் ஸ்கூட்டரில் 8.5 kW மின்சார மோட்டார் பொருத்தப்பட்டு அதிகபட்ச பவராக 11 bhp மற்றும் 72 Nm டார்க் வழங்குகின்றது.
இரண்டு விதமான வேரியண்டாக 2021 ஆம் ஆண்டு அறிமுக செய்யப்பட்ட ஒன் மாடலில் ஒற்றை வேரியண்ட் ஆனது மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. 5 kWh லித்தியம் ஐயன் பேட்டரி பேக் கொண்ட மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 212KM/charge ரேஞ்சு வழங்கும். ஆனால் இதன் பிறகும் 6 % பேட்டரி இருப்பு உள்ளதாக குறிப்பிட்டிருக்கின்றது.
5Kwh என்பது 3.3kWh ஃபிக்ஸடு பேட்டரியாகவும் 1.5kWh பேட்டரி நீக்கும் வகையில் ஸ்வாப் நுட்பத்தை கொண்டதாக அமைந்துள்ளது. நீக்கும் வகையிலான பேட்டரி 7 கிலோ எடை கொண்டதாகும்.
இக்கோ மோடில் நிகழ்நேரத்தில் சிம்பிள் ஒன் எலகட்ரிக் ஸ்கூட்டர் 150-180Km வரை வழங்ககூடும். ஈக்கோ மோடு எனபது 45 Km/h என வரையறுக்கப்பட்டுள்ளது.
சிம்பிள் ஒன் ஸ்கூட்டரில் ஈக்கோ, ரைடு, டாஷ் மற்றும் சோனிக் ஆகிய நான்கு ரைடிங் மோடுகளைக் கொண்டுள்ள ஸ்கூட்டரில் 0-40km வேகத்தை எட்டுவதற்கு வெறும் 2.77 விநாடிகளை எடுத்துக் கொள்ளும்.
ஒன் மின்சார ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் 105km/h ஆகும். 90/90-12 அங்குல வீல் இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது.
750 வாட்ஸ் சார்ஜரை ஒன் ஸ்கூட்டருக்கு வழங்கப்பட்டுள்ள சார்ஜரை கொண்டு 0-80 சதவிதம் ஏற 5 மணி நேரம் 54 வீட்டில் உள்ள சார்ஜர் போதுமானதாகும். கூடுதலாக ஃபாஸ்ட் சார்ஜர் ஆப்ஷனை தனியாக ரூ.13,000 கட்டணத்தில் அறிமுகம் செய்துள்ளது.
மேலும் கூடுதலாக டிசி ஃபாஸ்ட் சார்ஜர் ஆப்ஷனை செப்டம்பர் 2023 முதல் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் 0-80 % சார்ஜிங் பெற 1.5 கிமீ தூரத்திற்கு 1 நிமிடம் போதுமானதாகும்.
ஒன் ஸ்கூட்டரில் உள்ள 250 வாட்ஸ் சார்ஜர் மட்டும் கொடுக்கப்படும் என்பதனால், இதன் மூலம் சார்ஜ் செய்ய அனேகமாக 15 மணி நேரம் தேவைப்படலாம்.
ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் புளூடூத் மூலம் மொபைலுடன் இணைக்கப்படும் 7-இன்ச் TFT கிளஸ்ட்டரில் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களாக டர்ன் பை டர்ன் நேவிகேஷன், கால் அலர், எஸ்எம்எஸ் அலர்ட் பெற்தாக விளங்குகின்றது. ஓவர் தி ஏர் (OTA) புதுப்பிப்புகள் மூலம் மென்பொருளைப் புதுப்பிக்க முடியும்.
பிரேசன் பிளாக், நம்ம ரெட், கிரேஸ் ஒயிட் மற்றும் அஸூர் ப்ளூ , அடுத்து டூயல் டோன் பிரேசன் எக்ஸ் மற்றும் லைட் எக்ஸ் ஆகியவற்றுடன் ஆறு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. டூயல் டோன் கொண்ட மாடல்களின் விலை ரூ.5,000 ஆகும்.
Simple One எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை
simple one – ₹ 1.45 லட்சம்
simple one Dual tone – ₹ 1.50 லட்சம்
750 Watts Charger ₹ 13,000
(all price ex-showroom Bengaluru)
ஏற்கனவே, ரூ.1947 கட்டணமாக வசூலிக்கப்பட்டு சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முன்பதிவு நடைபெற்று 60,000 எண்ணிக்கையை பதிவு செய்திருந்ததாக குறிப்பிட்டிருந்தது. எனவே, இந்த மாடல் முன்பே பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு ஜூன் 6 ஆம் தேதி முதல் டெலிவரி வழங்கப்பட உள்ளது.
சிம்பிள் எனெர்ஜி இவி நிறுவனம் அடுத்த 8 முதல்10 மாதங்களில் நாடு முழுவதும் உள்ள 40-50 முக்கிய மாநகரங்களில் 140-150 டீலர்களை நிறுவ திட்டமிட்டுள்ளது.