இந்தியாவில் பிரபலமாக விளங்குகின்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் 2025 ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் எஸ் மற்றும் எஸ்டி வேரிண்டுகளில் மாறுபாடுகள் செய்யப்பட்டு கூடுதல் பேட்டரி திறனை பெற்றுருப்பத்துடன் ரேஞ்ச் உள்ளிட்டவற்றில் மாறுதல்களை பெற்றிருக்கின்றது.
2025 டிவிஎஸ் ஐக்யூப் S மற்றும் ST வகைகளில் தற்பொழுது சிறிய பேட்டரி பெற்றிருந்த 3.4Kwh இப்பொழுது 3.5Kwh ஆகவும், பெரிய 5.1kwh பேட்டரி பெற்ற டாப் வேரியண்ட் 5.3kwh ஆக மாற்றப்பட்டுள்ளது.
2025 TVS iQube
ஆரம்ப நிலை ஐக்யூப் 2.2Kwh வேரியண்டின் பேட்டரியில் எந்த மாற்றமும் இல்லாமல் IDC மூலம் சான்றிதழ் பெறப்பட்ட 94 கிமீ வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் உண்மையான ரேஞ்ச் ஈக்கோ மோடில் 75 கிமீ கிடைக்கின்ற மாடலின் விலை ரூ.1,01,526 (எக்ஸ்-ஷோரூம்) ஆக உள்ளது.
அடுத்து, 3.5Kwh பேட்டரி பெற்றுள்ள ஐக்யூப் வேரியண்ட் IDC மூலம் சான்றிதழ் பெறப்பட்ட 145 கிமீ வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் உண்மையான ரேஞ்ச் ஈக்கோ மோடில் 110 கிமீ கிடைக்கின்ற மாடலின் விலை ரூ.1,24,149 (எக்ஸ்-ஷோரூம்) ஆக உள்ளது. 0-80 % சார்ஜிங் பெற 4.30 மணி நேரம் போதுமானதாக அமைந்துள்ளது.
3.5Kwh பேட்டரி பெற்று 7 இன்ச் TFT கிளஸ்ட்டருடன் ஐக்யூப் S வேரியண்ட் IDC மூலம் சான்றிதழ் பெறப்பட்ட 145 கிமீ வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் உண்மையான ரேஞ்ச் ஈக்கோ மோடில் 110 கிமீ கிடைக்கின்ற மாடலின் விலை ரூ.1,35,475 (எக்ஸ்-ஷோரூம்) ஆக உள்ளது. 0-80 % சார்ஜிங் பெற மூன்று மணி நேரம் போதுமானதாக அமைந்துள்ளது.
3.5Kwh பேட்டரி பெற்றுள்ள q-பாரக் அசிஸ்ட் பல்வேறு கனெக்ட்டிவ் வசதிகளுடன் ஐக்யூப் ST வேரியண்ட் IDC மூலம் சான்றிதழ் பெறப்பட்ட 145 கிமீ வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் உண்மையான ரேஞ்ச் ஈக்கோ மோடில் 110 கிமீ கிடைக்கின்ற மாடலின் விலை ரூ.1,45,666 (எக்ஸ்-ஷோரூம்) ஆக உள்ளது. 0-80 % சார்ஜிங் பெற மூன்று மணி நேரம் போதுமானதாக அமைந்துள்ளது.
டாப் 5.3Kwh பேட்டரி பேக்கினை பெற்று TPMS உட்பட 32 லிட்டர் ஸ்டோரேஜ் ஐக்யூப் ST வேரியண்ட் IDC மூலம் சான்றிதழ் பெறப்பட்ட 212 கிமீ வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் உண்மையான ரேஞ்ச் ஈக்கோ மோடில் 150-160 கிமீ கிடைக்கின்ற மாடலின் விலை ரூ.1,59,569 (எக்ஸ்-ஷோரூம்) ஆக உள்ளது. 0-80 % சார்ஜிங் பெற 4.18 மணி நேரம் போதுமானதாக அமைந்துள்ளது.